அதிரைக்கு வரும் பால்காரர்கள் கொரோனா சோதனை செய்ய வேண்டும் - சம்சுல் இஸ்லாம் சங்கம்

Editorial
2
கொரோனா வதந்தி காரணமாக அதிராம்பட்டினத்தை சேர்ந்த யாரையும் ஊருக்குள் விடக்கூடாது, அதிராம்பட்டினத்துக்கு யாரும் செல்லக்கூடாது என கிராம பஞ்சாயத்துக்கள் பிறப்பித்த உத்தரவால் அதிரையில் வழக்கமாக பால் ஊற்றிக் கொண்டிருந்தவர்கள் எந்த முறையான முன் அறிவிப்பும் இன்றி விநியோகத்தை தடாலடியாக நிறுத்தினர். இதனால் அதிரையில் குழந்தைகள், பெரியவர்கள் பால் இன்றி கடும் இன்னல்களுக்கு ஆளாகினர்.

இதனை தொடர்ந்து அதிரையை சேர்ந்தவர்கள் வெளியூர்களுக்கு சென்று பால் வாங்கி வந்து வீடு வீடாக விநியோகம் செய்து வருகின்றனர். இதனால் மக்கள் ஓரளவு ஆறுதல் அடைந்துள்ளனர். கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகும் இவர்களிடமே மக்கள் பால் வாங்கி உள்ளூர் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என அதிரையை சேர்ந்த பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த சூழலில் அதிரை கொரோனா பாதிக்கப்படாத பகுதியாக மாறி வருவதை அறிந்த வெளியூர் பால்காரர்கள் மீண்டும் ஊருக்குள் வந்து பால் விநியோகிக்கத் தொடங்கியுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வரும் அதிரையில் இந்த வெளியூர்களில் இருந்து வரும் பால்காரர்கள் மூலம் மீண்டும் கொரோனா பரவிவிடுமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டு உள்ளது. 

இந்த நிலையில், அதிரை சம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பான சிஸ்யா இதுகுறித்து முக்கியமான சில முடிவுகளை எடுத்து உள்ளது. இதுகுறித்து சமூக இடைவெளியுடன் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பலரது கருத்துக்களை பெற்று 3 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளன. 

அதன் படி,
1. ஊரடங்கு முடிவடையும் நாளான மே 17-ம் தேதி வரை வெளியூர் பால்காரர்கள் யாரும் முஹல்லாவுக்கு உட்பட்ட வீடுகளில் பால் விநியோகிக்க கூடாது.

2. ஊரடங்கு முடிந்து பால் விநியோகிக்க வேண்டும் என்றால் கொரோனா சோதனை செய்து பாதிப்பு இல்லை என்பதை உறுதிபடுத்த வேண்டும்.

3. இனி முஹல்லா பகுதிக்குள் பால் விநியோகிப்பவர்கள் ஆதார் போன்ற அடையாள அட்டை நகலை சங்கத்தில் ஒப்படைத்து விட்டு, சங்கம் அனுமதித்தால் மட்டுமே வீடுகளில் பால் விநியோகிக்க வேண்டும்.

ஆகிய 3 முடிகள் எடுக்கப்பட்டுள்ளன.

Post a Comment

2Comments
  1. அவர்களை அனுமதி அளிக்க கூடாது

    ReplyDelete
  2. தரம் பார்க்காமல் நம் இஸ்லமீய இலங்கர்கல் இணைந்து மாடுகளை வாங்கி கறந்து வினியோகம் பன்னவேன்டும்

    ReplyDelete
Post a Comment
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...