- File image
அதிரையில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. நோன்பு நேரத்தில் பெரும்பாலான மக்கள் வெளியில் செல்வதை தவிர்த்த காரணத்தால் வெயிலின் தாக்கத்தை உணர முடியவில்லை. ஆனால், தற்போது ஊரடங்கு ஓரளவு தளர்த்தப்பட்டு கடைகள் திறக்கப்பட்டதால் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்கிறார்கள். இதனால், வெயிலின் தாக்கத்தை அதிகம் உணர்கிறார்கள். அதிக வெப்பம் மற்றும் புழுக்கத்தால் வீடுகளிலும் ஏ.சி. இல்லாமல் உறங்க முடியவில்லை என்ற புலம்பல் சத்தம் காதுகளில் விழுகிறது.
இந்த சூழலில் இன்று மாலை முதல் அதிரையில் குளிர்ச்சி நிலவி வருகின்றது. காலை இருந்த வானிலைக்கும் தற்போதைய வானிலைக்கும் தொடர்பே இல்லாத அளவுக்கு குளிர்ந்த காற்று வீசி வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில், இனியும் தொடர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், இந்த வானிலை மாற்றத்துக்கான காரணம் குறித்து டெல்டா வெதர்மேன் தெரிவிக்கையில், இலங்கை ஒட்டிய தென்மேற்கு வங்ககடல் பகுதியில் காற்று சுழற்சி நீடிக்கிறது. இதனால் நேற்று அதிரையில் சில பகுதிகளில் மழை பெய்தது.