அதிரையின் பொக்கிஷம் 'தமிழ்மாமணி' அஹ்மத் அவர்களின் வாழ்க்கை குறிப்பு

Editorial
1
அதிரை அஹ்மத். தமிழின் மிக முக்கிய எழுத்தாளர்களுள் ஒருவர். தமிழ், இஸ்லாம், வரலாறு, கவிதைகள் சார்ந்த பல பிரபலமான புத்தகங்களை எழுதி உள்ளார். அல்-மஹா பெண்கள் இஸ்லாமிய கல்லூரியின் முதல்வராக பணியாற்றியவர். அதற்கு பிறகும் கல்லூரியின் வளர்ச்சிக்கு ஆலோசனை வழங்கி வந்துள்ளார்கள்.

அதிரை நிருபர் தளத்தில் தொடர் கட்டுரைகள், கவிதைகளை எழுதி வந்துள்ளார். அதிரையின் வரலாற்று தகவல்களையும், தமிழ் முஸ்லிம்களின் வரலாற்று தகவல்களையும் திரட்டுவதில் முழு மூச்சாக செயல்பட்டு வந்தார். முஹம்மது நபி(ஸல்) அவர்களின் முழு நீள வரலாற்றை அலசும் தமிழ் புத்தககங்களில் அதிரை அஹ்மத் அவர்கள் எழுதிய புத்தகம் மிக முக்கியமானதாக உலமாக்களாலும், வரலாற்று அறிஞர்களாலும் பார்க்கப்படுகிறது.
கடந்த 2017 ஆம் ஆண்டு அதிரை அஹமத் அவர்களுக்கு 'தமிழ்மாமணி' விருது வழங்கப்பட்டது. இந்த விருது பெற்றபின் தனது முகநூல் கணக்கில் 'நான் தமிழ்மாமணி'யா! என்ற பெயரில் தொடரை எழுதி வந்தார். அதில் தன் வாழ்க்கை குறிப்பு மற்றும் தமிழ் மேல் தனக்கு ஏற்பட்ட ஆர்வம், தனது தமிழ் தொண்டு பற்றி விரிவாக எழுதியுள்ளார்.

நமது அதிரை பிறை தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே ஊக்கமும் உத்வேகமும் அளித்து வந்தவர். எந்த சடைப்பும் இன்றி நமது எழுத்துப் பிழைகள், கருத்துப்பிழைகள், இலக்கண பிழைகளை சுட்டிக்காட்டி நமக்கு ஒரு ஆசானாக இருந்தவர். அதிரையில் வளர்ந்து வரும் இளம் பத்திரிகையாளர்களுக்கு தொடர்ந்து ஆலோசனைகளை வழங்கி வந்தவர். தனது தமிழ் அறிவையும் மார்க்க அறிவையும் அடுத்த தலைமுறைக்கும் கடத்த அரும்பாடுபட்டவர்.

 எந்த சமரசமும் இன்றி தனது கருத்தை முன்வைக்கக் கூடிய எழுத்தாளர். அதிரையின், தமிழின் மிகச்சிறந்த ஆளுமை. இஸ்லாத்திற்குள் ஊடுருவிய பித்அத்தான மூட நம்பிக்கைகளை எதிர்த்து தைரியமாக கருத்துக்களை முன் வைத்த தவ்ஹீத்வாதி. அன்னாரது ஒவ்வொரு புத்தகமும் பொக்கிஷம். அதை நமது அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

எழுதிய புத்தகங்கள்:

இஸ்லாம் ஓர் அறிமுகம்
இஸ்லாமிய இலக்கியச் சிந்தனை
மழைப்பாட்டு (உரை)
Wisdom in the Dawn (ஆங்கிலம்)
இளமைப் பருவத்திலே (மொழிபெயர்ப்பு)
ஆயிஷாவின் சிறுமிப் பாட்டு
அரும்புப் பாட்டு
பெண்மணி மாலை
ஒருமைப் பாட்டு
இறையருட்கவிமணி மாலை
அருமையான வாழ்வும் அமைதியான இறப்பும்
ஏசுவை நேசித்தேன் பேறு பெற்ற பெண்மணிகள் பாகம் -1
பேறு பெற்ற பெண்மணிகள் பாகம் – 2
நபி வரலாறு நம் பிள்ளைகளுக்கு
நபி வரலாறு
சல்மான் அல் ஃபாரிஸி ( மொழிபெயர்ப்பு )
அலீ பின் அபீதாலிபு
கப்பாப் இப்னுல் அறத்து ( மொழிபெயர்ப்பு )
அபூதர் அல்ஃகிஃபாரி
மிக்தாத் இப்னுல் அஸ்வத் (மொழிபெயர்ப்பு)
இறைத்தூதர் முஹம்மத்
வட்டியை ஒழிப்போம்! (மொழிபெயர்ப்பு)
அண்ணலார் கற்றுத் தந்த தலைமைத்துவம் (இலக்கியச் சோலை)
தொழுகையாளிகளே! (மொழிபெயர்ப்பு)
மொட்டுகளே மலருங்கள்!
கவிதை – ஓர் இஸ்லாமியப் பார்வை
நல்ல தமிழ் எழுதுவோம்!
ஈமான் – இஸ்லாம் கவி மலர்கள்
நபி ( ஸல்) வரலாறு
பேருபெற்ற பெண்மணிகள்
மரபுக்கவிதைகள் உட்பட மொத்தம் ஏராளமான நூல்களை எழுதி உள்ளார்.

- நூருல் இப்னு ஜஹபர் அலி

Post a Comment

1Comments
 1. என் ஆசான் அதிரை அஹ்மத் மறைவை ஒட்டி என் இரங்கற்பா

  உளம்நிறை அன்பு தந்து
  உயர்நிறை கல்வி தந்து
  வளம்நிறை மார்க்கம் காட்டி
  வழிநடத் தியவென் ஆசான்
  தளம்பல எழுத்தால் நின்று
  தமிழரின் உள்ளம் வென்று
  களம்பல கண்ட நீங்கள்
  காலமும் முடிந்து சென்றீர்!

  அன்புடன்
  மாணவன்
  *கவியன்பன் கலாம்*

  https://m.facebook.com/story.php?story_fbid=3975493975825568&id=100000950138936

  ReplyDelete
Post a Comment
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...