அதிரை முன்னாள் சேர்மன் அஸ்லமுக்கே இந்த நிலையா? கொரோனாவை காரணம் காட்டி கேஸ் விநியோகிக்க மறுப்பு

Editorial
1
கொரோனாவை இஸ்லாமியர்களுடன் தொடர்புபடுத்தி மதவெறியர்கள் பரப்பிய வதந்தியால் பல மருத்துவமனைகளில் இஸ்லாமியர்களுக்கு பிரசவம் போன்ற அவசர சிகிச்சைகள் மறுக்கப்படுகின்றன. நேற்று அதிரையை சேர்ந்த சகோதரியின் பிரசவத்துக்கு இரத்தம் தர தஞ்சையை சேர்ந்த இரத்த வங்கி மறுத்து உள்ளது. இந்த அதிர்ச்சி குறைவதற்குள், அதிரை முன்னாள் சேர்மன் S.H.அஸ்லம் ஒரு ஆடியோவை வெளியிட்டு உள்ளார்.

இது குறித்து பேசிய அவர், 

"நான் கொள்ளுக்காடு இண்டேன் கேஸுக்கு விண்ணப்பித்து 4, 5 நாட்களாகியும் விநியோகிக்கப்படவில்லை. இதுகுறித்து நான் புகாரளித்துள்ள நிலையில், நேற்று இண்டேன் ஊழியர் என்னை அழைத்து கேஸ் முன்பதிவை ரத்து செய்துவிட்டீர்களா என வினவினார். நான் அதை மறுத்தபோது நீங்கள் கேன்சல் செய்துவிட்டதாக ட்ரைவர் எழுதி கொடுத்துள்ளார் என அவர் கூறினார். உடனே நான் ட்ரைவர் நம்பரை கேட்டேன். போனில் பேசிய அந்த ஊழியர் முத்தம்மாள் தெருவை சேர்ந்த பாஸ்கர் என்ற ட்ரைவர் எண்ணை கொடுத்தார். நான் அவரிடம் இதுபற்றி கேட்டபோது, நோயை ஒட்டிக்கொண்டு என்னால் போக முடியாது, என கம்பெனியில் சொல்கிறார்கள் என அவர் கூறுகிறார். இந்த சூழ்நிலையை பலரும் பயன்படுத்தி நம்மை கேவலப்படுத்துகிறார்கள். பாஸ்கரிடம் இதுபோன்ற அனுபவத்தை யாரேனும் சந்தால் என்னை தொடர்புகொள்ளுங்கள். அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளேன்" என்றார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்கள் பலரும் தற்போது குணமடைந்து வருகின்றனர். இதில் பெரிதும் குற்றம்சாட்டப்பட்ட தப்லீக் ஜமாத்தினரின் இரத்தத்தை சேகரித்து பிளாஸ்மாவை எடுத்து கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க ஆராய்ச்சியாளர்கள் முயற்சித்து வருகின்றனர். ஆனால், உள்ளூரில் உள்ளவர்களோ சில சமூக  விரோதிகளின் அவதூறான வெறுப்புக் பேச்சைக்கேட்டு பல ஆண்டுகளாக சகோதரர்களாக பழகி வந்தவர்களை ஒதுக்கும் வேலையை செய்கிறார்கள். 
Tags

Post a Comment

1Comments
  1. அஸ்ஸலாமு அலைக்கும்தமிழ்நாடு கவர்மெண்ட் தற்க நடவடிக்கை எடுக்கும் வரை இதை எல்லோரும் சேர் செய்யுங்கள் மக்களே

    ReplyDelete
Post a Comment
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...