அதிரையர்களே! வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் இப்தார், சஹர் உணவு படங்கள் வேண்டாமே...

Editorial
0
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு இந்தியாவில் அமல்படுத்தப்பட்டு உள்ளது. பல்வேறு நாடுகளிலும் இந்த ஊரடங்கு அமலில் உள்ளதன் காரணமாக பல்வேறு தொழில்கள் முடங்கியுள்ளன. அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் தவிர்த்து இதர கடைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கூலித்தொழிலாளர்கள், அன்றாடம் வருமானம் ஈட்டும் கட்டிட பணியாளர்கள், சிறு குறு வணிகர்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். அன்றாட செலவுக்கே பணம் இல்லாத காரணத்தால் கால் வயிறு உணவை சாப்பிட்டு வருகின்றனர். 

இது ஒருபுறமிருக்க ஊரடங்கு உத்தரவால் பணி செய்யும் இடத்திலிருந்து சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் உணவு இன்றி பலர் தவித்து வரும் சூழலை காண முடிகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களுடன் தொடர்புடையவர்கள்,  அறிகுறி உடையவர்கள் என தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்கள் பணக்காரர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் தற்பொழுது முழுமையாக உணவு கிடைப்பது கிடையாது.

வழக்கமாக உணவுக்கு கஷ்டப்படும் ஏழைகள் கூட ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி, இப்தார் விருந்து போன்றவை மூலம் ஓரளவுக்கு சாப்பிட்டு ஆறுதல் அடைவார்கள். ஆனால் தற்பொழுது நோன்பு கஞ்சி விநியோகம் தடுக்கப்பட்டுள்ளதுடன் இப்தார் விருந்துக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதால் அவர்களுக்கு கஞ்சி கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

இப்படி பலர் பசியில் இருக்க நாம் வீடுகளில் அறுசுவை உணவுகளை உண்டு அதை படம் எடுத்து வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றோம். வழக்கமாக இதுபோல் பகிர்வதில் பெரிய தவறு ஒன்றுமில்லை. ஆனால் இத்தகைய சூழலில் பலர் உணவின்றி அவதியுறும் நிலையில் நாம் அறுசுவை உணவுகளை பகிர்வது சரியல்ல. பசியில் தவிக்கும் பலரை சங்கடப் படுத்தும் வகையில் நமது பதிவுகள் அமைந்து விட வேண்டாம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...