நாளை அதிரையில் மின் தடையா?

Editorial
0
நாளை அதிரையில் மின்தடை என்றும் பரவும் செய்தியின் உண்மைத்தன்மையை விளக்குகிறது இந்த பதிவு.

அதிரையில் நாளை (26-04-2020) மின்தடை செய்யப்படும் என்று சமூக வலைதளதங்களிலும், மக்களிடையேயும் பரவி வருகிறது. இந்த செய்தியின் உண்மைத்தன்மையை அறிந்துகொள்ள அதிரை பிறை சார்பில் அதிரை மின்சார வாரியத்தின் துணை மின்பொறியாளரிடம் தொடர்புகொண்டு விசாரித்தோம். 

அப்போது பேசிய அவர், நாளை மின்சாரம் துண்டிக்கப்படாது என்றும், பரவி வரும் செய்தி முற்றிலுமாக பொய்யானது என்றார். இது போன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் அதிரை பிறை சார்பாக மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...