வெளியில் செல்வதற்கான கலர் கார்டை இன்னும் தரவில்லை - புலம்பும் அதிரை மக்கள்

Editorial
0
அதிராம்பட்டினத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளவரை அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் வெளியே நடந்து செல்ல பச்சை, ஊதா மற்றும் ரோஸ் ஆகிய மூன்று வண்ணங்களில் அனுமதி அட்டை விநியோகம் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

 இந்த அனுமதி அட்டையின்படி பச்சை நிற அட்டையை திங்கள் மற்றும் வியாழன் ஆகிய கிழமைகளில் மட்டும் பயன்படுத்திக்கொள்வதற்கும், ஊதா நிற அட்டையை செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளில் மட்டும் பயன்படுத்திக்கொள்வதற்கும் மற்றும் ரோஸ் நிற அட்டையை புதன் மற்றும் சனிக்கிழமைகளில் மட்டும் பயன்படுத்திக்கொள்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த அட்டை இருந்தால் தான் அவசியத்தேவைக்காக வாரம் 2 நாள் அந்த வீட்டை சேர்ந்தவர்கள் வெளியில் செல்ல முடியும். இந்த நிலையில், அதிரை நடுத்தெரு கீழ்புறம், ஆலடித்தெரு, மேலத்தெரு மேல்புரம், கிராணி நகர் நகரில் உள்ள வீடுகளில் இந்த அட்டை இன்னும்  வரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 இதுகுறித்து நடுத்தெரு கீழ்புறம், ஆலடித்தெரு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் நம்மிடம் தொடர்புகொண்டு புகாரளித்துள்ளனர். அரசிடம் அட்டைகளை பெற்று வீடுகளுக்கு விநியோகிப்பதாக கூறிய பொறுப்பாளர்கள் அலட்சியம் காரணமாக அட்டை கிடைக்காமல் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியில் செல்ல முடியாத நிலை உள்ளதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இதுபோன்ற மிக முக்கியமான வேலைகளை செய்ய முடியும் என்றால் மட்டுமே அந்த பொறுப்பை ஏற்க வேண்டும். இல்லாவிட்டால் அமைதியாக இருந்துவிடலாம். இப்போது இவர்களின் அலட்சியம் காரணமாக மக்கள் பலர் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

இதுபோல் உங்கள் தெருக்களில் இந்த அட்டை விநியோகிக்கப்படவில்லை என்றால் கீழே உள்ள கமெண்ட் பாக்சில் கருத்திடுங்கள்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...