அதிரை வழியே பட்டுக்கோட்டை - திருவாரூர் இடையே புதிய ரயில் சேவை

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon
தெற்கு ரயில்வே, திருச்சி ரயில்வே கோட்டத்தின் சார்பாக திருவாரூர் சந்திப்பில் இருந்து பட்டுக்கோட்டைக்கு புதிய டெமு பயணிகள் சிறப்பு ரயில் (வண்டி எண் 06851/06852) வருகிற மே மாதம் மூன்றாம் தேதி வெள்ளிக்கிழமை முதல் இயக்கப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த  டெமு ரயில் வாரத்தில் ஐந்து நாட்கள் திங்கள் முதல் வெள்ளி வரை இயங்கும். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்காது. இந்த ரயில் திருவாரூரில் காலை 8:30 மணிக்கு புறப்பட்டு மாங்குடி, மாவூர் ரோடு, திருநெல்வேலிக்காவல், அம்மனூர், ஆலத்தம்பாடி, மணலி, திருத்துறைப்பூண்டி, தில்லைவிளாகம், முத்துப்பேட்டை அதிராம்பட்டினம் வழியாக பட்டுக்கோட்டைக்கு காலை 10.0 5 மணிக்கு வந்து சேரும்.

மீண்டும் இந்த டெமு ரயில் பட்டுக்கோட்டையில் மாலை 05. 15 மணிக்கு க்கு புறப்பட்டு திருவாரூருக்கு 06. 55 மணிக்கு சென்றடையும். இந்த ரயில் இத்தடத்தில் உள்ள பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள், வியாபாரிகள், ரயில் பயணிகள்,  அலுவலர்கள் ஆகியோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...