அதிரை துறைமுகம் பற்றி "கீழடி மியூசியத்தில்" இடம்பெற்ற மேப்.. வியப்பூட்டும் வரலாற்று பெருமை

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon
நூற்றாண்டுகளுக்கு முன்னர் வங்காள விரிகுடாவின் மிக முக்கியமான துறைமுகம் ஒன்று அதிராம்பட்டினத்தில் செயல்பட்டிருக்கிறது. இது வாணிப தளமாகவும் திகழ்ந்திருப்பது கல்வெட்டுகளின் மூலமாக அறியமுடிகிறது. அரேபியர்கள் அதிராம்பட்டினம் துறைமுகத்துடன் வர்த்தக தொடர்பு வைத்திருந்திருக்கிறார்கள். 

வெள்ளையர்கள் ஆட்சியிலும் இந்த துறைமுகம் செயற்பட்டு வந்துள்ளது, என்பதற்கு தற்பொழுது அதிரையில் தூய்மை செய்யப்பட்டு வரும் கடற்கரை இடம் அருகே உள்ள வெள்ளையர்களின் சுங்க கட்டிட எச்சங்களே ஒரு சாட்சி. 
தற்போது அதிராம்பட்டினத்தின் கடற்கரையும் பொழிவிழந்து விட்டது. துறைமுகமும் இல்லாமலேயே போய்விட்டது. 

தமிழ்நாட்டின் கடல் வாணிப வரலாறு தொடர்பாக பேசுபவர்களும் ராமநாதபுரம், நாகப்பட்டினம், தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள கடற்கரை நகரங்களைப் பற்றி பேசுகிறார்களே ஒழிய, தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்த ஒரே வணிக துறைமுகமான அதிராம்பட்டினம் பற்றி அதிக அளவில் பேசுவது இல்லை. இப்படி அதிராம்பட்டியத்தின் வரலாறு மறைக்கப்பட்ட நிலையில் தற்போது கீழடி அகழ்வாராய்ச்சி அருங்காட்சியகம் மூலம் வெளியில் தெரிந்துள்ளது.

ஆம், பூமிக்கு அடியில் புதைந்து கிடந்த தமிழர்களின் வரலாற்றை உலகிற்கு உணர்த்தி வரும் கீழடியில் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள், வரலாற்று பொக்கிஷங்களை காட்சிப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு அருங்காட்சியகத்தை அமைத்து இருக்கிறது. வியப்பூட்டும் தமிழர்களின் வரலாற்று உண்மைகளை உணர்த்திக் கொண்டிருக்கும் அந்த அருங்காட்சியகத்தில் தமிழ்நாடு துறைமுகங்கள் என்று வைக்கப்பட்டுள்ள வரைபடத்தில் அதிராம்பட்டினம் துறைமுகமும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சங்க கால துறைமுகங்கள் நீல நிறத்திலும், இடைக்கால துறைமுகங்கள் சிவப்பு நிறத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த வகையில் அதிராம்பட்டினம் துறைமுகம் சிவப்பு நிறத்தில் இடைக்கால துறைமுகமாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியை அடுத்து டெல்டா மாவட்டத்தில் அதிராம்பட்டினம், கோடியக்கரை, நாகப்பட்டினம், தரங்கம்பாடி, காவிரிப்பூம்பட்டினம், ஆகியவை துறைமுகங்களாக இருந்துள்ளதாக அந்த வரைபடத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அதிராம்பட்டினம் இடைக்காலத்தில் மிக முக்கிய துறைமுகங்களில் ஒன்றாக இருந்துள்ளது என்பது தெரிய வந்திருக்கிறது.Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...