அதிரை காவல்துறைக்கு அதிமுக பிச்சை கண்டனம்.. போதைப் பொருள் ஒழிப்பை வலியுறுத்தி மனித சங்கிலி (வீடியோ)

Editorial
0
தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக போதைப்பொருள் விவகாரம் பெரும் பூதாகரமாகி வருகிறது. திமுக அயலக அணி துணை அமைப்பாளராக பதவி வகித்து வந்த ஜாபர் சாதிக் என்பவர் சுமார் 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கினார். அதைத்தொடர்ந்து அவர் திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார்.

இதனை அடுத்துபோதைப்பொருள் நடமாட்டத்தை  திமுக அரசு கட்டுப்படுத்த தவறிவிட்டதைக் கண்டித்து இன்று அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

அதன் தொடர்ச்சியாக அதிரையில் அதிமுகவின் மனித சங்கிலி போராட்டம் தொடர்பான போஸ்டர்கள் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டு இருந்தன. நகராட்சி புதிய கட்டிடம் கட்டப்படவுள்ள பயணியர் மாளிகை வளாக கதவிலும் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. இந்த நிலையில் அந்த போஸ்டர்களை காவல்துறை கிழித்ததாக அதிமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட அங்கு வந்த அதிமுகவினர் இதனைக் கண்டித்துள்ளனர். இதுகுறித்து அதிமுக நகர செயலாளர் பிச்சை அளித்துள்ள பேட்டியில், "அதிமுகவின் போதை ஒழிப்பு மனித சங்கிலி போராட்டத்திற்காக நேற்று இரவு அதிரையில் ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்கள் காவல்துறை உதவியுடன் அப்புறப்படுத்தப்பட்டு இருக்கிறது. மீண்டும் இன்று காலை அதிரையில் போஸ்டர் ஒட்ட முயன்ற போது காவல்துறையே தடுக்கிறது.

 புனிதமான காவல்துறை தங்கள் வேலையை விட்டுவிட்டு இப்படி போஸ்டர் அப்புறப்படுத்துவதற்கு கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம். போதை ஒழிப்பதற்கு எத்தகைய தடைகள் வந்தாலும் அதை அதிமுக எதிர்கொள்ளும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்." என்றார்.



 

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...