மல்லிபட்டினம் சிறுமி கடத்தல் முயற்சி தகவல் வதந்தி.. வீடியோவில் பேசிய நபரை கைது செய்து போலீஸ் எச்சரிக்கை

Editorial
0
இது குறித்து காவல்துறை வெளியிட்டு உள்ள சுற்றறிக்கையில், "தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவசத்திரம் காவல் நிலையம், மல்லிப்பட்டினம் கிராமத்தில் கடந்த 08.03.24 அன்று 9 வயதுள்ள ஒரு சிறுமியை சில அடையாளம் தெரியாத நபர்கள் காரில் வந்து மல்லிப்பட்டினத்தில் கடத்த முயற்சித்ததாக சமுக வலைதளங்களில் செய்தி பரவி வந்தது. இதனை தொடர்ந்து தஞ்சாவூர் சைபர் க்ரைம் குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், பேராவூரணி காவல் நிலைய பெண் ஆய்வாளர் மற்றும் மாவட்ட குழந்தைகளுக்கான உதவிகரங்கள் கண்காணிப்பாளர் திருமதி.அஜிதா மற்றும் ஒருங்கிணைப்பாளர் திரு.சுரேஷ் அவர்கள் நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இதனை தொடர்ந்து மேற்படி சிறுமியிடம் விசாரணை செய்தபோது அந்த சிறுமி முன்னுக்குபின் முரணாக பதில் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வு சம்மந்தமாக பெட்டிக்கடை உரிமையாளர் மற்றும் அருகில் குடியிருந்தவர்களை விசாரணை செய்தபோது காலையில் மேற்படி இடத்தில் எந்த காரும் நின்றதாக தெரியவில்லை என்றும், மேற்கண்டவாறு எவ்வித சம்பவமும் நடைபெறவில்லை எனவும் கூறியுள்ளனர்.

சமுக வலைதளங்களில் இதனை பதிவேற்றம் செய்த மல்லிப்பட்டினத்தை சேர்ந்த முகமது காசிம் மகன் ஜாபர் சாதிக் என்பவரை விசாரணை செய்த போது கடந்த 08.03.24 அன்று மல்லிப்பட்டினம் காதிரியார் தெருவை சேர்ந்த 9 வயது பெண் சிறுமி ஒருவர் அடுத்த தெருவிலுள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றபோது பெட்டிக்கடை அருகில் நின்று கொண்டிருந்த காரில் இருந்து ஒருவர் இறங்கி வந்து காரில் ஏறும்படி வற்புறுத்தியதாகவும் இதனால் பயந்து வீட்டிற்கு ஓடி வந்ததாகவும் கூறினார். மேற்படி விவரத்தினையும், சிறுமி தெரிவிக்காத தகவல்களையும் மிகைப்படுத்தி சிறுமி கடத்தல் என்று தன்னுடைய முகநூல் பக்கத்தில் நேரடி வீடியோவாக பதிவேற்றம் செய்ததாக கூறியுள்ளார்.

இதுபோல் வதந்தியை பரப்பி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியதற்காக தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவில் மேற்கண்ட ஜாபர் சாதிக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வழக்கில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதுபோன்று பொதுமக்களிடையே யாராவது வதந்தி பரப்பினால் அவர்கள் மீது கடுமையாள நடவடிக்ககை எடுக்கப்படும் என தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...