அதிரை சிஎம்பி வாய்க்காலில் தண்ணீர் வர நீரேற்று நிலையம் - திமுக தேர்தல் அறிக்கை குழுவுக்கு நகராட்சி தலைவர் பரிந்துரை

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon
அதிரை சிஎம்பி வாய்க்காலில் தண்ணீர் திருப்பிவிட நீரேற்று நிலையம் அமைக்கப்படும் என்பதை திமுக மக்களவை தேர்தல் அறிக்கையில் சேர்க்குமாறு நகராட்சி தலைவர் தாஹிரா அம்மாள், நகராட்சி துணைத் தலைவர் குணசேகரன் ஆகியோர் பரிந்துரைத்து கடிதம் எழுதியுள்ளனர்.

அதில் குறிப்பிட்டுள்ளதாவது, "பட்டுக்கோட்டை நகரத்திலிருந்து தெற்கு பகுதி அதிராம்பட்டினம் கடற்கரை பகுதி வரை கடை மடை பகுதியாக உள்ளது. இப்பகுதிக்கு சி. எம். பி. வாய்க்காலிலிருந்து தொடர்ந்து தண்ணீர் வருவதில்லை. ஆகையால் இந்தப் பகுதியில் உள்ள ஏரி குளங்கள் மழைநீரை நம்பியே உள்ளது. பட்டுக்கோட்டை அருகில் உள்ள சேண்டாக்கோட்டை மேற்குபகுதியில், அக்னி காட்டாற்றில் மழைநீர் பெருமளவில் சென்று கடலில் கலந்து விடுகின்றது. 

அங்கு ஒரு நீரேற்று நிலையம் அமைத்து அருகில் உள்ள சி. எம். பி. வாய்க்காலில் தண்ணீர் ஏற்றுவதற்கு ஏற்பாடு செய்தால் செல்லிகுறிச்சி என்ற மிகப்பெரிய ஏரியும் அதைத்தொடர்ந்து அருகில் உள்ள அனைத்து கிராமங்களில் உள்ள ஏரி குளங்கள் தண்ணீர் நிறைந்தால் விவசாய சாகுபடியும் குடிநீர் பற்றாக்குறையும் தீருவதோடு நிலத்தடி நீர் குறைபடாமலும் அருகில் உள்ள கடல்நீர் உட்புகாமலும் தடுப்பதற்கு இத்திட்டம் பெரும் உதவியாகவும், கடைமடை விவசாயிகளும் பட்டுக்கோட்டை தாலுக்காவில் உள்ள பாதி கிராமங்களுக்கு மேல் குடிநீர் வசதியும் எக்காலத்திற்கும் கிடைக்கும் என்பதாலும் இத்திட்டத்தை ஏற்படுத்திதர அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்." என்று குறிப்பிட்டுள்ளனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...