அதிரை நகராட்சி செய்த காரியம்.. மூச்சு முட்டிய சி.எம்.பி லேன் மக்கள்! இதுக்கு ஒரு தீர்வே கிடையாதா? (வீடியோ)

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon
அதிரையில் வீடுகளில் குப்பைகளை பெற்றுச் செல்ல துப்புரவு தொழிலாளர்கள் முறையாக வருவதில்லை என்ற புகார் அவ்வப்போது எழுவது வழக்கம். இதனால் பொதுமக்கள் சாலையோரங்களிலும் நீர் நிலைகளிலும் குப்பைகளை கொட்டி வந்தனர். காலப்போக்கில் அப்பகுதியே குப்பை மேடாகவும் உருமாறியது. இப்படி தெருவுக்கு 4 குப்பை மேடுகள் இருந்தன. 

குறிப்பாக ஆங்காங்கே கொட்டப்படும் குப்பைகள், மக்களின் அலட்சியத்தாலோ, விலங்குகள், பறவைகள், காற்றின் காரணமாகவோ சிதறிக்கிடக்கின்றன. இதனால் சுற்றுச்சூழல் சீர்கேடுகள் தலை தூக்கின. கொசுத்தொல்லை காரணமாக அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு டெங்கு போன்ற கொடிய நோய் தொற்றுகள் ஏற்பட்டன. இந்த நிலையில் குப்பைகளை சேகரிக்க வரும் தூய்மை பணியாளர்கள் அதை அள்ளி செல்லாமல் அங்கேயே எரித்துவிடுகின்றனர். குறிப்பாக சி.எம்.பி. லேன் பகுதியில் இந்த பிரச்சனை அதிகம் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

அப்பகுதியை சேர்ந்த நபர் எடுத்து அனுப்பிய விடியோவைதான் தற்போது நிங்கள் பார்த்துகொண்டு உள்ளீர்கள். நகராட்சியில் குப்பை கொட்ட முறையான இடம் இல்லாததால் மக்களின் சுகாதாரம் பற்றி கூட கவலைப்படாமல் இவ்வாறு செய்ய நகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.


Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...