அதிரை ரமலானில் வீணடிக்கப்படும் பல லட்சங்கள்.. ஆடம்பர சஹர், இஃப்தார் பார்டிகள் வேண்டாமே

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon

ரமலான் மாதம் நெருங்கிவிட்டது. இம்மாதத்தில் அதிரையர்கள் பலர் பலரிடம் நிதி வசூல் செய்து ஆடம்பரமான இஃப்தார் மற்றும் சஹர் பார்டிகளை வைப்பது வழக்கம். இதற்கான ஏற்பாடு செய்வதற்கே இப்புனித மாதம் முழுவதையும் பலர் வீணடிக்கின்றனர். இது அல்லாமல் வெளிநாட்டில் கஷ்டப்பட்டு உழைக்கும் பலரிடம் பல ஆயிரக்கணக்கில் இதற்காக நிதி வசூலிகப்படுகிறது. அத்தியாவசமான பல்வேறு காரியங்களுக்கு நிதி கிடைக்காத சூழலில் இதற்காக அதிரையில் மட்டுமே பல லட்சங்கள் செலவழிக்கப்படுகிறது.


நாம் இது தொடர்பாக விசாரித்தபோது சிலர் நன்மையை நாடியும், நண்பர்கள், ஜமாத்தார்களை ஒரே இடத்தில் சந்திப்பதற்காகவும், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பொருளாதார பலம் கொண்டவர்கள் தங்களின் பணத்தை செலவழித்து தங்களின் செல்வாக்கை காட்டுவதற்காகவும் இதுபோன்ற விருந்துகளை நடத்துவதை அறிய முடிந்தது.


அதிலும் இது போன்ற சஹர், இஃப்தார் விருந்தில் கலந்துக்கொள்பவர்களில் பெரும்பாலானோர் வீட்டில் நல்ல உணவு உண்பவர்கள் தான். அதே சமயம் நோன்பு பிடிக்கும் ஏழை முஸ்லிம்கள் இஃப்தார் உணவை பள்ளிகளில் உண்டாலும் சஹர் உணவுக்கு கஷ்டப்படுகிறார்கள். மறுபக்கம் நோன்பு நோற்கும் ஏழை குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தான உணவு கிடைப்பதில்லை. அந்த வகையில் முத்துப்பேட்டை ஐக்கிய ஜமாத் சார்பில் ரமலானின் கடைசி 10 நாட்களில் ஆடம்பர சஹர் விருந்துகள் வைப்பதை தவிர்த்து அந்த தொகையை பைத்துல்மாலுக்கு வழங்கி உதவுமாறு கேட்டுக்கொண்டு உள்ளனர்.


எனவே இதுபோன்ற பார்ட்டிகளுக்கு நிதியுதவி வழங்காமல் தேவை உடையவர்களுக்கு நிதியையோ, உணவையோ வழங்கினால் உங்கள் பொருளாதாரம் வீணாகாமல் இருக்கும். முத்துப்பேட்டை போன்று அதிரையை சேர்ந்த முஹல்லா ஜமாத்துகளும் பொதுமக்களை அறிவுறுத்தினால் நன்றாக இருக்கும்.


Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...