அதிரை தாலுகாவை தள்ளிவை.. திருவோணத்தை தூக்கி முன்னால் வை - தொடரும் ஏமாற்றம்

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 2 நகராட்சிகளில் ஒன்று பட்டுக்கோட்டை. மற்றொன்று அதிராம்பட்டினம். பரப்பளவிலும், மக்கள், தொகையிலும், வருவாயிலும் மற்ற பகுதிகளை விட சிறந்து விளங்குகிறது. 40 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இப்பகுதியை தாலுக்காவாக அறிவிக்க வேண்டும் என்பது எங்கள் ஊர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. தஞ்சாவூர் மாவட்டத்தில் மீனவர்கள் அதிகம் வசிக்கும் பெரிய ஊர் இது. கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியிருக்கும் பகுதியான இங்கு ஏராளமான கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் என பல்வேறு சிறப்புகள் உள்ளன.

இவ்வளவு வசதிகள் இருந்தும் இது தாலுக்காவாக இல்லாத காரணத்தால் எல்லாவற்றுக்கும் 12 கிமீ தொலைவில் உள்ள பட்டுக்கோட்டையை நாடி இருக்க வேண்டியுள்ளது. தாலுக்கா அமைந்தால் இங்கு தொழில் வளர்ச்சியும் பெருகும். கடந்த 2022 ஆம் ஆண்டு சட்டசபையில் வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், "பட்டுக்கோட்டையின் பரப்பளவு மற்றும் மக்கள் தொகையை ஆய்வு செய்து அதிராம்பட்டினத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டத்தை உருவாக்குவதற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் அதிகாரிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்." என்று அறிவித்தார். 

அந்த அறிவிப்பின்படி இங்குள்ள விவசாய, மீனவ மக்களின் நலன் கருதி அதிராம்பட்டினத்தை தாலுக்காக அறிவிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் 2 ஆண்டுகளாகியும் இதுவரை அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் அதிராம்பட்டினத்தை தாலுக்காக அறிவிக்க வேண்டும் என ஒரே கிளிக்கில் முதலமைச்சர் ஸ்டாலின், தலைமை செயலாளர், வருவாய் துறை அமைச்சர், வருவாய் துறை செயலாளர், வருவாய் துறை ஆணையர், மாவட்ட ஆட்சியர், பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ., பட்டுக்கோட்டை RDOவுக்கு ஒரே கிளிக்கில் மெயில் அனுப்பும் வசதியை அதிரை பிறை சார்பில் அறிமுகம் செய்தோம். ஆயிரக்கணக்கானோர் அதன் மூலம் மெயில் அனுப்பினர்.

இந்த நிலையில் அதிராம்பட்டினத்தை விரைவில் தாலுக்காவாக அறிவிக்கப்படும் என கடந்த ஜனவரி மாதம் முன்னாள் கோட்டாட்சியர் அறிவித்து இருந்தார். ஆனால், 2 மாதங்களாகியும் இதுவரை அது தொடர்பாக எந்த முன்னேற்றமும் தெரியவில்லை. இந்த நிலையில் பட்டுக்கோட்டை மற்றும் ஒரத்தநாடு வருவாய் வட்டங்களை பிரித்து திருவோணத்தை நகராட்சியாக அறிவித்து உள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். இதனால் அதிராம்பட்டினம் லிஸ்டிலேயே இல்லையா என்ற கேள்வியை மக்கள் எழுப்புகின்றனர். நாம் அரசு தரப்பில் விசாரித்தபோது அதிரை தாலுக்கா தொடர்பான பரிந்துரைகள், ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன் தாலுக்கா அறிவிப்பு வரும் என்று கூறப்படுகிறது.

மெயில் அனுப்பும் திட்டம்: அதிராம்பட்டினத்தை தாலுக்காக அறிவிக்க வேண்டும் என ஒரே கிளிக்கில் முதலமைச்சர் ஸ்டாலின், தலைமை செயலாளர், வருவாய் துறை அமைச்சர், வருவாய் துறை செயலாளர், வருவாய் துறை ஆணையர், மாவட்ட ஆட்சியர், பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ., பட்டுக்கோட்டை RDOவுக்கு ஒரே கிளிக்கில் மெயில் அனுப்பும் வசதியை அதிரை பிறை சார்பில் கடந்த ஆகஸ்டு மாதமே அறிமுகம் செய்தோம். கீழே உள்ள பட்டனை அழுத்தினால் உங்கள் ஜிமெயில் திறக்கும். அதில் சென்று SEND பட்டனை அழுத்தினால் மெயில் சென்றுவிடும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...