அதிரையில் மீண்டும் விபத்து ஏற்படுத்தும் வகையில் பறக்கும் பைக்குகள்.. பறிமுதல் செய்ய காவல் ஆய்வாளரிடம் ஐமுமுக மனு

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon

அதிரையில் கடந்த வாரம் ஒரு நாள் இடைவெளியின்றி தொடர்ந்து வாகன விபத்துகள் ஏற்பட்டு வந்தன. இதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 7 பேர் காயமடைந்தனர். இதனை அடுத்து காவல்துறை பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வாகன தணிக்கை திவிரப்படுதியது. இதனால் சில நாட்கள் மிதமான வேகத்தில் ஈ.சி.ஆர். சாலையில் வாகனங்கள் சென்ற நிலையில், தற்போது மீண்டும் விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை வேகமாக இயக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் நேற்று ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழக மருத்துவ அணி சார்பில் அதிரை காவல் ஆய்வாளரை சந்தித்து வாகன தணிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என மனு அளித்துள்ளனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...