அதிரை இமாம் ஷாபி ஜப்தி.. நகராட்சி அத்துமீறலை கண்டித்து SDPI அறிவித்த ஆர்ப்பாட்டம் இடமாற்றம்

Editorial
0
அதிரை இமாம் ஷாபி பழைய பள்ளியை ஜப்தி செய்த நகராட்சியை கண்டித்து எஸ்டிபிஐ நாளை ஆர்ப்பாட்டம் அறிவித்து உள்ள நிலையில் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து வெளியான அறிவிப்பில், "பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தை அத்துமீறீ சீல் வைத்த 
அதிராம்பட்டினம் நகராட்சியின் அடாவடி!திமுகவின் நகராட்சி நகர் மன்ற தலைவர், துணைத் தலைவர், ஆணையர் அவர்களை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நாளை 13/01/2024 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.

மாவட்ட பொதுசெயலாளர் N.M.சேக்தாவூது தலைமையில் நடக்கிறது. கண்டன உரையை மாநில செயலாளர் A.அபூபக்கர் சித்தீக் ஆற்றுகிறார். ஏற்கனவே அதிரை பேருந்து நிலையம் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்தியன் வங்கி அருகே மாற்றப்பட்டு உள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...