அதிரை திமுக நகர து.செயலாளர் அன்சர் கான் பிடியில் நகராட்சி இடம்.. அவரே ஒப்புக்கொண்ட உண்மை

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon
அதிராம்பட்டினம் இமாம் ஷாபி பழைய பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து இமாம் ஷாபி பழைய பள்ளி வளாகத்தை எந்தவிதமான சட்ட விதிகளையும் பின்பற்றாமல் நகராட்சி நிர்வாகம் புல்டோசருடன் வந்து ஜப்தி செய்தது அதிரை மக்களை கொந்தளிப்படைய செய்துள்ளது. சிறுபான்மை கல்வி நிறுவனமான இமாம் ஷாபியின் மீது நகராட்சி நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிராக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கண்டன குரல்கள் எழுந்து வருகின்றன.

கடந்த வியாழக்கிழமை முதல் இமாம் ஷாபி பழைய பள்ளி வெளியே அதிராம்பட்டின மக்கள் ஷாகின் பாக் பாணியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சமூக ஆர்வலர்கள் பெண்கள் குழந்தைகள் முதியோர்கள் என ஏராளமானோர் போராட்டத்தில் பங்கெடுத்து உள்ளார்கள். 

இரவு பகல் பாராமல் விடிய விடிய நடந்து வரும் இந்த போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும் பாபநாசம் தொகுதி எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா, வெல்பேர் கட்சி மாநில தலைவர் அப்துர் ரஹ்மான், மாநில துணைத் தலைவர் முஹம்மது கவுஸ், ஐ.எம்.எம்.கே. தலைவர் ஹைதர் அலி,  எஸ்டிபிஐ கட்சி மாநில நிர்வாகி அபூபக்கர் சித்திக், மனிதநேய ஜனநாயக கட்சி முன்னாள் எம்எல்ஏ தமீமுன் அன்சாரி உள்ளிட்டோர் நேரடியாக கலந்து கொண்டு மக்களுக்கும் இமாம் ஷாபி பள்ளி நிர்வாகத்துக்கும் ஆதரவு தெரிவித்து இருப்பதுடன் நகராட்சி துணைத் தலைவர் குணசேகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைமையை வலியுறுத்தியுள்ளனர்.

இன்று ஆறாவது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக அதிரை திமுக நகர துணை செயலாளர் அன்சர் கான் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் உங்கள் இடம் அரசு புறம்போக்கு இடம் என சொல்லப்படுகிறதே என கேள்வி எழுப்பப்பட்டதும் இதற்கு பதிலளித்த அன்சர் கான், "நிச்சயமாக நகராட்சி இடம்தான். நான் கொடுக்க மாட்டேன் என்று சொல்லவில்லை. நகராட்சி என்னிடம் கேட்கவில்லையே." என்றார்




Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...