அதிரை விரைவில் தாலுக்காவாகிறது.. அதிரை பிறையின் தொடர் முயற்சிக்கு வெற்றி

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சியான அதிராம்பட்டினம் பரப்பளவிலும், மக்கள், தொகையிலும், வருவாயிலும் மற்ற பகுதிகளை விட சிறந்து விளங்குகிறது. 40 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இப்பகுதியை தாலுக்காவாக அறிவிக்க வேண்டும் என்பது எங்கள் ஊர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை.

தஞ்சாவூர் மாவட்டத்தின் 2 நகராட்சிகளுல் ஒன்று அதிராம்பட்டினம். தஞ்சாவூர் மாவட்டத்தில் மீனவர்கள் அதிகம் வசிக்கும் பெரிய ஊர். கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியிருக்கும் பகுதி. ஏராளமான கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் என பல்வேறு சிறப்புகளை கொண்டது.

இவ்வளவு வசதிகள் இருந்தும் தாலுக்காவாக இல்லாததால் எல்லாவற்றுக்கும் 12 கிமீ தொலைவில் உள்ள பட்டுக்கோட்டையை நாடி இருக்க வேண்டியுள்ளது. தாலுக்கா அமைந்தால் இங்கு தொழில் வளர்ச்சியும் பெருகும். 

கடந்த 2022 ஆம் ஆண்டு சட்டசபையில் மான்புமிகு வருவாய் துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் "பட்டுக்கோட்டையின் பரப்பளவு மற்றும் மக்கள் தொகையை ஆய்வு செய்து அதிராம்பட்டினத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டத்தை உருவாக்குவதற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் அதிகாரிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்." என்று அறிவித்தார்கள். 

அந்த அறிவிப்பின்படி இங்குள்ள விவசாய, மீனவ மக்களின் நலன் கருதி அதிராம்பட்டினத்தை தாலுக்காக அறிவிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இதுவரை அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் அதிராம்பட்டினத்தை தாலுக்காக அறிவிக்க வேண்டும் என ஒரே கிளிக்கில் முதலமைச்சர் ஸ்டாலின், தலைமை செயலாளர், வருவாய் துறை அமைச்சர், வருவாய் துறை செயலாளர், வருவாய் துறை ஆணையர், மாவட்ட ஆட்சியர், பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ., பட்டுக்கோட்டை RDOவுக்கு ஒரே கிளிக்கில் மெயில் அனுப்பும் வசதியை அதிரை பிறை சார்பில் அறிமுகம் செய்தோம்.

ஆயிரக்கணக்கானோர் அதன் மூலம் மெயில் அனுப்பினர். இந்த நிலையில் அதிராம்பட்டினத்தை விரைவில் தாலுக்காவாக அறிவிக்கப்படும் என கோட்டாட்சியர் அறிவித்து உள்ளார்.


Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...