Ads: Crescent builders - Coming Soon
மனோரஞ்சன் பாங்க் ஆப் இந்தியா என்ற பெயரில் ஃபுல் ஆப் ஃபன் என்று குறிப்பிடப்பட்ட ரூ 500 நோட்டை கொடுத்து கடைக்காரரை ஏமாற்றி இருக்கிறார்கள் மோசடி பேர்வழிகள். இமாம் ஷாபி பள்ளியின் 50 ஆம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள விற்பனை ஸ்டால்களில் உள்ள ஒரு கடையில் இந்த 500 ரூபாய் நோட்டை கொடுத்து பணத்தை மாற்றி சென்று ஏமாற்றி இருக்கிறார்கள்.
பல முறை முயற்சித்து இந்த மோசடியை அரங்கேற்றி இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இதே போல் அதிரையின் மற்ற கடைகளிலும் இந்த மோசடிகாரர்கள் ஏமாற்ற முயற்சிக்கலாம். எனவே வியாபாரிகள் ரூபாய் நோட்டுக்களை நன்கு ஆராய்ந்து பெறுமாறு அறிவுறுத்துகிறோம்.