அதிரையில் அரசு உத்தரவை மீறி கோயிலுக்கு வர சொல்லி ரூ.1000 பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon
பொங்கலை ஒட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ரூ.1000 ரொக்கப்பணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதன்படி, தமிழகத்தில் 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு மற்றும் ரொக்கப்பணம் ரூ.1000 வழங்கப்படுகிறது. ரேஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று டோக்கன் விநியோகம் செய்வார்கள் என்று அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. அந்த டோக்கனில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நாள், நேரம் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் நேற்று தொடங்கிய டோக்கன் விநியோக பணி இன்றுடன் நிறைவடைகிறது. 10 ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள 35 ஆயிரம் ரேஷன் கடைகள் மூலமாக பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில் அதிரையில் வீடு வீடாக டோக்கன் விநியோகம் செய்யாமல் மக்களை வர சொல்வதாக புகார் எழுந்துள்ளது.

குறிப்பாக சுரைக்காய் கொல்லை பகுதியில் கோயிலுக்கு வந்து மக்கள் டோக்கன் பெற்று செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மழை பெய்து வரும் நிலையில் கோயிலுக்கு செல்ல தயக்கப்பட்டு பலர் அங்கு டோக்கன் வாங்காமல் மக்கள் இருந்துள்ளனர். அரசு வீடு வீடாக சென்று டோக்கன் விநியோகிக்க சொல்லி இருக்கும் நிலையில் அதை மீறி இவ்வாறு மழை நேரத்தில் மக்களை அலைக்கழிப்பது, ரேசன் கடை போன்ற பொதுவான இடத்துக்கு மக்களை வர சொல்லாமல் அனைத்து மதத்தினர் வாழும் பகுதியில் குறிப்பிட்ட மதம் சார்ந்த இடத்துக்கு வர சொல்லி அழைப்பது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.  



Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...