அதிரை இமாம் ஷாபி இட பிரச்சனை.. சட்டத்தை மீறும் நகராட்சி! நாளை கலெக்டரை சந்திக்கும் பள்ளி நிர்வாகம்

Editorial
0
அதிரை கல்வி அறக்கட்டளை வெளியிட்டு உள்ள அறிக்கையில், "அதிரை நகராட்சிக்கும் நமது ஊர் இமாம் ஷாபி (ரஹ்) பழைய பள்ளிக்கும் இட விவகாரத்தில் கோர்ட் கேஸ் நடந்து கொண்டு இருக்கிறது. இதில் நம் பள்ளிக்கு சாதகமாக இருந்த தடை ஆணையை நீக்கப்பட்டு உள்ளது. இதனால் நாங்கள் மேல் அப்பீலுக்கு செல்ல இருக்கிறோம். 

இதற்கு இடையில் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் நகராட்சி கீழ் கோர்ட்டு மூலம் இடம் காலி செய்யவேண்டி மனு செய்ய வேண்டும். அந்த மனுவின் அடிப்படையில் கோர்ட் தான் அமீனா முலம் நமக்கு நோட்டீஸ் கொடுத்து கால அவகாசம் கொடுத்து நாம் காலி செய்து கொடுக்க வேண்டும் இது தான் நேரான கோர்ட் நடவடிக்கை.

இதை நகராட்சி நிர்வாகம் முறைப்படுதாமல் தாங்களாக அதிகாரத்தைப் பயன்படுத்தி இப்பள்ளிக்கு அவகாசம் கிடைக்காமல் இருப்பதற்காக போலீஸ் மற்றும் இதர உயர் அதிகாரிகளின் துணையுடன் எங்களை அணுகி பலவந்தமாக பள்ளியில் வகுப்பு நடந்து கொண்டு இருக்கும் சூழ்நிலையில் எல்லாவற்றையும் அப்புறப்படுத்தி இடத்தை கைப்பற்ற இருக்கிறார்கள்.

இந்த அநீதிக்கு எதிராக தாங்கள் பொதுநலன் கருதி முழு ஒத்துழைப்பு தருமாறும் நாளை 04-12-2023 திங்கள் கிழமை காலை மாவட்ட ஆட்சித்தலைவரை தஞ்சாவூரில் சந்தித்து இது விசயமாக மனு கொடுக்க உள்ளோம். அதற்காகவும் தாங்கள் மற்றும் தங்கள் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களின் ஒத்துழைப்பை நல்கிட கேட்டுக்கொள்கிறேன். மேலும் இதற்காக எடுக்கப்படும் எல்லா முயற்சிகளுக்கும் தங்களின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் தருமாறு மிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...