அதிரை AFFA வீரர் தமிழ்நாடு U18 கால்பந்து அணிக்கு தேர்ச்சி.. பல்கலை அணியிலும் தேர்வாகி அசத்தல்

Editorial
0

நமது தஞ்சை  மாவட்டத்திற்கும் அதிரைக்கும் பெருமை சேர்த்திடும் வகையில் அகில இந்திய அளவில் நடைபெறும் 18 வயதிற்கு உட்பட்டோருக்கான கால்பந்து போட்டியான கேலோ இந்தியா கால்பந்து தொடரில் தமிழ்நாடு  அணிக்காக விளையாட தேர்வாகி இருக்கிறார் அதிரை AFFA கால்பந்து கழக வீரர் A.S.ஆத்திஃப். அதிரை பழஞ்செட்டித் தெருவை சேர்ந்த இவர் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் பயின்றி வருகிறார். 

முன்னதாக இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பல்கலைகழகங்களுக்கு இடையிலான தொடரில் கலந்து கொள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக அணிக்கும் தேர்வாகினார் என்பதை அதிரை பிறையில் செய்தியாக வெளியிட்டு இருந்தோம்.

அடுத்தடுத்து அசத்தி வரும் வீரர் ஆதிஃபுக்கு அதிரை AFFA அணியின் இந்நாள், முன்னாள் நிர்வாகிகள் மற்றும் ஏனைய சக குழு விளையாட்டு வீரர்கள்  வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொண்டனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...