அதிரையில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் குணசேகரனை ஸ்டாலின் நீக்க வேண்டும் - வெல்பேர் கட்சி மாநிலத் தலைவர் வலியுறுத்தல்

Editorial
0
சென்னை: அதிராம்பட்டினம் நகராட்சி மன்ற துணைத் தலைவர் குணசேகரனின் செயல்பாடுகள் அதிராம்பட்டினம் மக்களிடையே நிலவும் மத நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையும் சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளதாக வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா மாநில தலைவர் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சனாதன எதிர்ப்பாளர்களாகவும் சிறுபான்மை காவலர்களாகவும் தங்களை பிரகடனப்படுத்திக் கொள்ளும் திமுகவினர் உள்ளுக்குள் இஸ்லாமிய வெறுப்பை சுமந்து கொண்டவர்களாகவே தெரிகிறார்கள் என்பதன் வெளிப்படையான எடுத்துக்காட்டுதான் அதிராம்பட்டினம் குணசேகரனும் அவர் அணியும்.
அதிராம்பட்டினம் நகராட்சி மன்ற துணைத் தலைவர் குணசேகரனின் செயல்பாடுகள் அதிராம்பட்டினம் மக்களிடையே நிலவும் மத நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையும் சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் அதிராம்பட்டினத்தில் சூழ்ச்சிகள் செய்து துணைத்தலைவர் பதவியை கைப்பற்றிய குணசேகரன், தொடர்ந்து அப்பகுதி மக்களுடைய நலனுக்கு எதிராக செயல்பட்டு வருவது கடும் கண்டனத்திற்குரியது. 

திமுக தலைவர்கள் தொடர்ந்து முழங்கி வரும் சனாதன எதிர்ப்பு சிறுபான்மை பாதுகாப்பு என்ற முழக்கங்களுக்கு வேட்டும் வைக்கும் வகையில்தான் குணசேகரனின் செயல்பாடுகள் அமைந்துள்ளது. மக்கள் நலனுக்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் அரசு விதிகளுக்கும் விரோதமாக செயல்படும் குணசேகரனை உடனடியாக பொறுப்புகளில் இருந்து நீக்கி தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்." என்று குறிப்பிட்டு உள்ளார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...