அதிரை பூர்வகுடிகளுக்கு பாதிப்பு.. கிராமங்களை இணைக்க முஸ்லிம் லீக் எதிர்ப்பு

Editorial
0
அதிரை நகராட்சியுடன் கிராமங்களை இணைப்பதை நிறுத்திட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தெரிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில். "தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம்-1994ன் படி ஒரு பேரூராட்சி நகராட்சியாக மாறுவதற்கான விதிகள் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அதிராம்பட்டினத்தில் மக்கள் தொகையும் வரி வருவாயும் போதியளவு  இருக்கிறது. அதேசமயம் பல வார்டுகளில் இன்னும் அடிப்படை வசதிகள் முழுமையாக செய்யப்படாததால் அதிராம்பட்டினம் மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். 

இந்நிலையில் ஏரிபுறக்கரை, மழவேனிற்காடு, நரசிங்கபுரம் ஆகிய கிராமங்களை அதிராம்பட்டினத்துடன் இணைக்க நகராட்சி திட்டமிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதனால் அதிராம்பட்டினம் நகரின் உட்கட்டமைப்பு வளர்ச்சி பாதிக்கப்படும். மேலும் பூர்வகுடிகளின் அரசியல் பிரதிநிதித்துவம் குறைவும் அபாயம் உள்ளது. 

எனவே நகரின் வளர்ச்சி மற்றும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு அதிராம்பட்டினத்துடன் புதிதாக கிராமங்களை இணைக்க கூடாது என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...