அதிரையில் உயிர் போகும் வரை அலட்சியம்.. மாட்டு கொட்டகையான நகராட்சி அலுவலகம்

Editorial
0
அதிரையில் கால்நடைகள் வளர்த்து வரும் பொது மக்கள், தங்களது வீட்டில் வளர்க்கும் பசு மாடுகளை வீடுகளில் கட்டிப்போடாமல், பிரதான சாலையில் தினமும் சுற்றி திரிய விடுகிறார்கள். இதனால் போக்குவரத்திற்கு இடையூறும், விபத்துகளும் ஏற்படுகிறது. பொது இடங்களில் சுற்றி திரியும் மாடுகள் சாலைகளில் சானம் இடுவதால் சுகாதார கேடு மற்றும் சாலை விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.

இது தொடர்பாக அடிக்கடி புகார்கள் வந்தவண்ணம் உள்ளது. ஆனாலும் இதையெல்லாம் கால்நடை வளர்ப்பவர்கள் கண்டுகொள்ளாமல் தங்கள் மாடுகளை தெருவில் சுற்றி திரிய விட்டு விடுகிறார்கள். அசம்பாவீதங்கள் நடக்கும் முன் நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிரை பிறையில் தொடர்ந்து பதிவிட்டு வந்தோம்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மாடால் அதிரையர் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற அதிர்ச்சி செய்தி வெளியானது. அதுவரை கண்டுகொள்ளாமல் இருந்த நகராட்சி மாடு வளர்ப்பவர்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தது. நேற்று இரவு கிழக்கு கடற்கரை சாலை, பேருந்து நிலையம் அருகே நின்றுகொண்டிருந்த பசுக்களை பிடித்து நகராட்சி அலுவலகத்தில் அடைத்தனர். உரிமையாளர் வராவிட்டால் ஏலம் விடப்படும் என்று கூறப்படுகிறது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...