அதிரை வரலாறு இவ்ளோ இருக்கா! அதிரை வரலாற்று ஆய்வகம் (AHRC) தொடக்க விழாவில் ருசிகரம்

Editorial
0
ஒவ்வொரு சமுதாயமும் தங்களின் கடந்த கால வரலாற்றை அறிந்துகொள்வதன் மூலம் நிகழ்கால வாழ்வை சீரமைத்து கொள்வதற்கும் எதிர் கால சந்ததியினரை ஊக்க படுத்துவதற்க்கும் உதவும். தற்கால சூழ்நிலையில் அவரவர் வரலாற்றை வரைவது காலத்தின் கட்டாயமாகும். ஆகவே நமதூர் கடந்தகால சமூக, பொருளாதார, மார்க்க ரீதியான வரலாற்றை ஆய்வு செய்து ஆவணப்படுத்தும் முயற்சியில் ஒரு குழு இறங்கியுள்ளது.

அதிரை வரலாற்று ஆய்வகம் - ADIRAI HISTORY RESEARCH CENTER (AHRC) என்று பெயர் வைக்கப்பட்டு உள்ள இந்த குழுவின் தொடக்க விழா இன்று மாலை 4.30 மணியளவில் ஷாதுலிய்யா புதுப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் உலமாக்கள், எழுத்தாளர்கள், கலந்துகொண்டு உரையாற்றினார்கள். அப்போது வரலாற்றின் முக்கியத்துவம், அதிரையின் வரலாறு, அரபுகளுடனான தொடர்பு, மசூதிகளின் வரலாறு போன்றவை குறித்து விரிவாக பேசினர். இதை முஹல்லாவாசிகள், பொதுமக்கள், சிறுவர்கள் என பலர் ஆர்வமுடன் கேட்டனர்.  இறுதியாக 3 இளைஞர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டன.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...