அதிரை CMP லேனில் களமிறங்கிய பெண்கள்.. 2வது வார்டு கவுன்சிலர் வீட்டுக்கே சென்று மனு

Editorial
0
அதிராம்பட்டினம் 2வது வார்டில் சாலை, கழிவு நீர் வடிகால், தெரு விளக்குகள், சி.எம்.பி வாய்க்கால் பராமரிப்பு, வெறிநாய்களை கட்டுப்படுத்துவது போன்ற அடிப்படை தேவைகள் எதையும் நகராட்சி முறையாக செய்யவில்லை என்றும், இது தொடர்பாக பல முறை புகார் அளித்து இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்த நிலையில் இது தொடர்பாக ஹனீப் பள்ளியில் 2வது வார்டு மக்கள் ஆலோசனைக் கூட்டத்தை கூட்டினர். அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி இரண்டாவது வார்டில் உள்ள அனைத்து வீடுகளிலும் வரி செலுத்துவோரின் கையொப்பம் பெற்று கடந்த செவ்வாய்கிழமை காலை ஹனீப் பள்ளியில் இருந்து மக்கள் நகராட்சி அலுவலகம் சென்று ஆணையரிடம் மனு அளித்தனர்.

அதை தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கி சென்று ஆட்சியர் மற்றும் ஆர்.டி.எம்.ஏ.வை சந்தித்து மனு அளிக்க உள்ளனர். இந்த நிலையில் முன்னதாக இன்று அதிராம்பட்டினம் 2 வது வார்டை சேர்ந்த பெண்கள் குழுவாக கவுன்சிலர் சித்தி ஆயிசாவின் இல்லத்திற்க்கே நேரடியாக சென்று நகல் மனுவை அளித்தனர்


Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...