அதிராம்பட்டினம் வரலாற்றை ஆய்வு செய்யும் அருமையான முயற்சி..AHRC அறிமுக விழாவுக்கு அவசியம் வாங்க

Editorial
0
ஒவ்வொரு சமுதாயமும் தங்களின் கடந்த கால வரலாற்றை அறிந்துகொள்வதன் மூலம் நிகழ்கால வாழ்வை சீரமைத்து கொள்வதற்கும் எதிர் கால சந்ததியினரை ஊக்க படுத்துவதற்க்கும் உதவும். தற்கால சூழ்நிலையில் அவரவர் வரலாற்றை வரைவது காலத்தின் கட்டாயமாகும். ஆகவே நமதூர் கடந்தகால சமூக, பொருளாதார, மார்க்க ரீதியான வரலாற்றை ஆய்வு செய்து ஆவணப்படுத்த ஒரு குழு முயற்சி மேற்கொண்டு உள்ளது. 

அதிரை வரலாற்று ஆய்வகம் - ADIRAI HISTORY RESEARCH CENTER (AHRC) என்று பெயர் வைக்கப்பட்டு உள்ள இந்த குழுவின் தொடக்க விழா நவம்பர் 10 - வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் ஷாதுலிய்யா புதுப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. 
இதில் அனைவரும் கலந்துகொண்டு ஆதரவு அளிக்குமாறு கேட்டுகொண்டு உள்ளார்கள். அதிரை வரலாற்று தொடர்பான ஆவணங்கள் மற்றும் புத்தகங்கள் தங்களிடம் இருந்தால் ஆய்வகத்திற்கு கொடுத்து உதவும்படியும் அந்த அமைப்பு கேட்டுக்கொண்டு உள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...