அதிரை சிஸ்யா ஏற்பாட்டில் வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்ற 2 பேருக்கு பணி உறுதி

Editorial
0
தமிழ்நாடு அரசு நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று காலை 8.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை பட்டுக்கோட்டையில் உள்ள ஏனாதி இராஜப்பா கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்த முகாமில் 8வது, SSLC / HSC, ITI, டிப்ளமோ, பட்டதாரிகள் மற்றும் B.E உட்பட பல்வேறு கல்வி தகுதிகளுக்கு தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் இருந்து பல்வேறு நிறுவனங்கள் ஆட்களை தேர்வு செய்ய வந்திருந்தன.

அதிரை இளைஞர்கள் இதில் பங்கேற்க ஷம்சுல் இஸ்லாம் சங்கம் இளைஞர் அமைப்பு (SISYA) சார்பில் இன்று காலை வாகன ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் மூலம் 6 பட்டதாரி இளைஞர்கள் முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்களுக்கு ஷம்சுல் இஸ்லாம் சங்க தலைவர்  இவர்களில் 2 பேருக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டு உள்ளது. அதில் ஒரு இளைஞருக்கு 2 நிறுவனங்களில் வேலை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...