அதிரையர்களின் வங்கி கணக்கில் மாயமாகும் பணம்.. விசாரித்த பின் வெளியான பகீர் தகவல்

Editorial
0
அதிராம்பட்டினம்: வங்கிக்கணக்கில் இருந்த பணம் குறைந்தது தொடர்பாக அதிரை கனரா வங்கியில் விசாரித்தபோது அதிர்ச்சிகர தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக அதிரை மாஜி என்பவர் பேஸ்புக்கில் பதிவிட்டு உள்ளதாவது, "பொது மக்களே உஷார்... ஆட்டைகடித்து மாட்டைக்கடித்து மனிதர்களையும் கடிக்க ஆரம்பித்துவிட்டது இந்த கொள்ளைக்கூட்டம்.. இப்படி ஒரு குறுஞ்செய்தி உங்களுக்கு வந்திருந்தால் உடனே தொடர்புடைய வங்கிக்கு சென்று முறையிடுங்கள்.

அரசு நிறுவனங்களையும், அரசுக்கு சொந்தமான உடைமைகளையும் விற்றது போக இப்போ பொதுமக்கள் பாக்கெட்டிலேயே கை வைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

#அடல்_பென்ஷன்_யோஜனா என்ற பெயரில் ஒரு பென்ஷன் திட்டத்தை தொடங்கி அப்படி ஒரு திட்டம் இருக்கிறது என்று தெரியாமலேயே என்னை அந்த திட்டத்தில் சேர்த்து என்னுடைய வங்கிக்கணக்கில் இருந்து இந்த மாதத்திற்கான 126 ரூபாயை திருடி இருக்கிறார்கள். 

அடல் பென்ஷன் யோஜனா என்றால் ஒவ்வொரு மாதமும்  ஒரு குறிப்பிட்ட தொகையை நம்முடைய வங்கிக் கணக்கில் இருந்து எடுப்பார்கள். நமக்கு 60 வயதை கடந்த பின்னர் நமக்கு மாதமாதம் 1000 முதல் 5000 ரூபாய் வரை அரசு தரும்..  இந்த திட்டத்தில் 18-40 வயது வரை உள்ளவர்கள் சேர்ந்துகொள்ளலாம். எந்த வயதில் இந்த திட்டத்தில் இணைகிறோம் (இணைக்கப்படுகிறோம்), பென்ஷன் தொகை எவ்வளவு என்பதைப் பொறுத்து ஒவ்வொரு மாதமும் குறைந்தது ₹42 முதல் அதிகபட்சம் ₹1317 வரை நம் கணக்கில் இருந்து எடுப்பார்கள். 

இப்போ பிரச்சனை என்னன்னா, எனக்கு இப்படி ஒரு திட்டம் இருப்பது தெரிவதற்கு முன்பே என்னுடைய விரும்பம் எதுவும் கேட்காமலேயே என்னை அந்த திட்டத்தில் இணைத்தது மட்டும் அல்லாமல் என்னுடைய வங்கிக் கணக்கில் இருந்து ₹126 ஐ திருடி உள்ளார்கள்? இதற்கு யார் பொருப்பு? ஒன்றிய அரசா? அல்லது என்னுடைய கணக்கை பராமரிக்கும் கனரா வங்கி நிர்வாகமா?

வங்கியை தொடர்புகொண்டால் அவர்கள் ஆதார், PAN ஜெராக்ஸ் மற்றும் இந்த திட்டத்தில் இருந்து வெளியாவதற்கு லட்டர் எழுதித்தர சொன்னார்கள். எழுதிக்கொடுத்தும் விட்டேன். இந்த திட்டத்தில் இருந்து வெளியாவதற்கு அதிகபட்சம் 48 நாட்கள் ஆகுமாம். அடுத்த மாதமும் குறிப்பிட்ட தொகையை என் கணக்கில் இருந்து பிடித்தம் செய்ய வாய்ப்பிருக்கிறது. (நம்மூரிலேயே எனக்கு முன்பு வேறொருக்கும் இப்படி ஆகி அவரும் வங்கிக்கு கடிதம் எழுதி கொடுத்திருக்கிறார் என்ற தகவலையும் தந்தார்கள்.)

என் அனுமதி இல்லாமல் என்னை எப்படி ஒரு திட்டத்தில் இணைத்தீர்கள் என்று கேட்டால் வங்கி தரப்பில் பதிலில்லை. Canara வங்கியின் Customer Care ஐ தொடர்புகொண்டு பேசினால், இதுபோன்ற ஒன்றிய அரசின் திட்டம் மொத்தம் 3 இருக்கிறதாம், அதையெல்லாம் வாடிக்கையாளர்களின் அனுமதி பெறாமலேயே இந்த திட்டங்களில் ஏதேனும் ஒன்றில் இணைத்துவிடுவார்களாம்.

ஆகமொத்தம் நம் பணத்திற்கு நாம்தான் பாதுகாப்பு. வங்கியில் வைத்துவிட்டோம், பாதுகாப்பாக இருக்கும் என்ற எண்ணத்தில் கடந்து செல்ல வேண்டாம். வங்கி கணக்கில் இருந்து 1 ரூபாய் வெளியே சென்றாலும் எதற்காக அதை எடுத்தார்கள் என்ற தெளிவில்லாமல் விட்டுவிடாதீர்கள்....! குறைந்தபட்சம் ஒவ்வொரு மாதமும் வைப்புத்தொகை சரியாக பராமரிக்கப்படுகிறதா என்று சரிபார்த்துக்கொள்ளுங்கள் இதுபோல பணம் எடுத்ததை கண்டுகொள்ளாமல் விட்டால் நமக்கு 60 வயதாகும் வரை நம் கணக்கில் இருந்து பணம் எடுப்பார்கள்.

அதற்கு பிறகு மாதா மாதம் ₹1000 தருவார்கள். நாம் 60 வயதை அடையும் போது அவர்கள் தரும் அந்த ₹1000 ஒரு கிலோ தக்காளி வாங்க கூட பத்தாது. அதையும் தாண்டி இது முற்றிலும் வட்டியை மையமாகக் கொண்ட திட்டம். எனவே உங்கள் வங்கிக்கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டிருந்தால் உடனே வங்கிக்கு சென்று சரிசெய்துவிடுங்கள்." என்று குறிப்பிட்டு உள்ளார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...