அதிரை மக்களுக்கு அதிர்ச்சி செய்தி.. இனி கேரளா ரயில் நமதூரில் நிற்காது! டம்மியாகுதா ரயில் நிலையம்?

Editorial
0
அதிரை வழியாக கடந்த 2019 ஆண்டு முதல் பல ஆண்டு கோரிக்கைகளுக்கு பிறகு ரயில் சேவை தொடங்கியது. கடந்த 2022 ஜூன் மாதம் முதல் இவ்வழியே முதல் எக்ஸ்பிரஸ் ரயிலான எர்ணாகுளம் - வேளாங்கண்ணி இடையேயான ரயில்சேவையை தொடங்கியது தெற்கு ரயில்வே.

வாரம் ஒரு முறை இயக்கப்பட்டு வந்த இந்த ரயில் கேரள மாநிலம் எர்ணாகுளத்திலிருந்து கோட்டையம், செங்கனாசேரி, திர்வல்லா, செங்கனூர், மவெலிகரா, காயங்குளம், சாஸ்தன்கோட்டா, கொல்லம், குந்தரா, கொட்டாரகர, புணலூர், தென்மலை, செங்கோட்டை, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகை ஆகிய ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டது வந்தது.
இந்த நிலையில் தற்போது இந்த ரயில் இந்த வழித்தடத்தில் வாரம் 2 முறை இயக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. அதில் ரயில் நிற்கும் இடத்தில் அதிராம்பட்டினம் ரயில் நிலையம் இடம்பெறவில்லை. திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை மட்டுமே உள்ளன. இதேபோல் பல ரயில் நிறுத்தங்கள் புதிய அறிவிப்பில் இடம்பெறவில்லை. ஏற்கனவே தாம்பரம் ரயிலை அதிரையில் நிறுத்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துவரும் நிலையில் இந்த அறிவிப்பு மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...