மாஸ் காட்டிய அதிரை AFFA.. மேலநத்தம் கால்பந்து போட்டியில் திரில் வெற்றிபெற்று ஃபைனலுக்கு முன்னேறியது

Editorial
0
திருவாரூர் மாவட்டம் மேலநத்தத்தில் கால்பந்தாட்ட தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த முன்னணி அணியினர் கலந்துகொண்டு விளையாடினர். இதன் அரையிறுதி போட்டி இன்று நடைபெற்றது.
இதில் அதிரை AFFA அணியும் பொதக்குடி அணியும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் AFFA அணி 
 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிப்பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. இப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருந்ததாகவும் AFFA வீரர்கள் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாகவும் பலர் கருத்திட்டு வருகிறார்கள்.
இப்போட்டியை நேரில் பார்த்த வஹா சலீம் பேஸ்புக்கில் பதிவிட்டு உள்ளதாவது, "சமீபத்தில் நான் கண்ட கால்பந்தாட்ட ஆட்டத்தில் நம் ஊர் வீரர்கள் என மெச்சிக்கும் வகையில் நடந்த  அரையிறுதி போட்டியில் #அதிரை_AFFA அணி மிக சிறப்பாக உலககோப்பை இறுதி போட்டி போன்றே கடைசி வரைக்கும் விறு விறுப்பாக நடந்த போட்டி காண்போரை அசர வைத்தது அல்ஹம்துல்லில்லாஹ் #அதிரை_AFFA 2 கோல் போட்டு பொதக்குடி அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது என்பதை தெரிவித்து கொள்கின்றோம் #அதிரை_AFFA அணிக்கும் இது போல் வீரர்களை தேர்வு செய்த AFFA நிருவாகத்திற்கும் #அதிரை_AFCC அணியின் சார்பாக பாராட்டுகின்றேன். #King_AFFA." என்று குறிப்பிட்டு உள்ளார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...