அதிரையில் நியோ மேக்ஸ் மோசடியில் கோடிகளை இழந்தவர்களே.. நீங்கள் புகாரளிக்க மதுரையில் சிறப்பு ஏற்பாடு

Editorial
0
மதுரையை தலைமையிடமாகக் கொண்ட நியோ மேக்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனம் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதம் 30% வட்டி தருவதாகவும், அத்துடன் சில ஆண்டுகளில் முதிர்வுத் தொகையையும் இரட்டிப்பாக்கித் தருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஒரு லட்சம் முதலீடு செய்தால் மாதம் ₹30 ஆயிரம் கிடைக்கும் என்றும் இதில் பரிந்துரைப்பவர்களுக்கு போனஸ் உண்டு எனக் கூறியுள்ளனர். இதற்கு ஆசைப்பட்டு  ஆயிரக்கணக்கான மக்கள் பல ஆயிரம் கோடி ரூபாய்களை முதலீடாக கொடுத்துள்ளனர்.

அதிரையிலும் ஏராளமானோர் நியோ மேக்ஸில் பல லட்சங்களை முதலீடு செய்துள்ளனர். இப்படி அதிரையில் இருந்து மட்டும் கோடிக்கணக்கில் முதலீடு சென்றுள்ளது. இந்த நிலையில் பணத்தை பெற்றுக்கொண்டு வட்டியும் முதிர்வுத்தொகையும் தரவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவில் புகார் அளித்தனர்.

அதன் அடிப்படையில் நியோ மேக்ஸ் நிறுவனத்தின் இயக்குநரான வீரசக்தி உள்ளிட்ட 17 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவான அதன் இயக்குநர்கள், முகவர்களைக் கைது செய்ய பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதே நியோ மேக்ஸ் நிறுவனம் பல பெயர்களில் தொடங்கிய நிறுவனங்களே 50 க்கு அதிகமாக இருக்கும் என்றும், அதில் ஏமாந்தவர்கள் 3 லட்சத்துக்கும் மேல் இருப்பார்கள் என்றும், அவர்களின் மோசடி செய்த தொகை 40,000 கோடிக்கு மேல் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்த நிலையில் ஒரே இடத்தில் வைத்து பாதிக்கப்பட்டோரிடம் புகார்களை பெறும் வகையில் பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு கூடுதல் டிபிபி உத்தரவின்பேரில், 'புகார் மனு மேளா' என்ற நிகழ்வுக்கு மதுரை பொருளாதார குற்றப்பிரிவு ஏற்பாடு செய்துள்ளது.

இதன்படி, இந்த மனு மேளா மதுரை புதுநத்தம் ரோட்டிலுள்ள ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. "இந்த மனுமேளாவில், பாதிக்கப்பட்டோர் உரிய ஆவணங்களுடன் வந்து எந்த பகுதியில் இருந்து பாதிக்கப்பட்டோம், தங்களது முகவர்கள், இயக்குநர்களின் பெயர்களை குறிப்பிட்டு புகார்களை அளிக்கலாம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்" என மதுரை பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு டிஎஸ்பி குப்புசாமி தெரிவித்தார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...