அதிரை நகராட்சிக்கு எதிராக கொதித்தெழுந்த அஸ்லம்.. தனி ஆளாக உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்

Editorial
0
அதிராம்பட்டினம்: 2 வது வார்டை நகராட்சி நிர்வாகம் புறக்கணிப்பதாக கூறி நகராட்சி அலுவலகம் முன் அதிரை முன்னாள் சேர்மன் அஸ்லம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் 2 வது வார்டு கவுன்சிலர் சித்தி ஆயிஷா அஸ்லம், அதிரை நகராட்சி ஆணையருக்கு ஒரு மனு அளித்தார். அதில், "தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சிக்கு அதிக வரி வருவாய் தரக்கூடிய அதன் 2வது வார்டில் பெரும்பாலும் மணல் சாலைகள் மட்டுமே உள்ளன.

கழிவுநீர் வடிகால் மற்றும் மழைநீர் வடிகால் வசதிகளும் இங்கு அறவேயில்லை. இதனால் 2வது வார்டு பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்கும் சூழல் உள்ளது. குறிப்பாக மழை பெய்யக்கூடிய சமயத்தில் முறையான மழைநீர் வடிகால் வசதி இல்லாததால் அங்குள்ள சில வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துவிடுகின்றது.

எனவே அதிராம்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட 2வது வார்டில் போர்க்கால அடிப்படையில் சாலை, கழிவுநீர் மற்றும் மழைநீர் வடிகால் பணிகளுக்கான திட்ட மதிப்பீட்டை தயார் செய்து உடனடியாக பணிகளை துவங்கி 2வது வார்டு மக்களின் குறைகளை தீர்த்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன்." என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில் இன்று நகராட்சி மன்ற கூட்டம் நடைபெற உள்ள நிலையில், அதில் பேசப்படும் விவகாரங்களில் 2 வது வார்டு தொடர்பாக எந்த அஜெண்டாவும் இல்லை என்று கூறி நகராட்சி அலுவலகம் முன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு உள்ளார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...