அதிரையில் பல்துறை கல்வி வழிகாட்டி குழுவை அமைத்த ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு


ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு நடத்தக்கூடிய கல்வி வழிகாட்டி முகாமினை அடுத்து மாணவர்களுக்கு தொடர்ச்சியான உயர் கல்வி வழிகாட்டுதல் வழங்குவதற்காக கல்வி வழிகாட்டி குழு  அமைக்கப்பட்டுள்ளது. 

இக்குழுவில் அரசு அலுவலர்கள், வழக்கறிஞர்கள், ஐடி பணியாளர்கள், மருத்துவர்கள், ஆடிட்டர்கள், பொறியாளர்கள், ஊடகவியலாளர்கள்  மற்றும் பல துறை சார்ந்த வல்லுநர்கள் இடம் பெற்று உள்ளார்கள். 


நம் மாணவர்களுடைய எதிர்காலம் சிறப்பாக அமைவதற்காக வேண்டி அமைக்கப்பட்டுள்ள இக்குழுவை தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை பூர்த்தி செய்ய வருகிற 29.04.2023 அன்று காலை 9.30 மணிக்கு நமது சங்க வளாகத்தில் நடைபெற உள்ள கல்வி வழிகாட்டி முகாமில் கலந்துகொண்டு பயனடைய ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு கேட்டுக்கொண்டு உள்ளது.

Post a Comment

0 Comments