அறிவித்தார் தமிழ்நாடு தலைமை காஜி.. நாளை நோன்பு பெருநாள் கொண்டாடலாம்
April 21, 2023
0
இன்று ரமலானின் 29 நோன்பை நிறைவு செய்த மக்கள் ஷவ்வால் பிறையை மாலை வானில் தேடியபோது பல இடங்களில் தென்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, மல்லிப்பட்டினம், அண்டை மாவட்டமான திருவாரூர், முத்துப்பேட்டையில் பிறை தென்பட்டு இருப்பதாக புகைப்படங்களுடன் அங்குள்ள நண்பர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நாளை நோன்பு பெருநாளை கொண்டாடுமாறு தமிழ்நாடு தலைமை காஜி சலாஹுத்தீன் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.