அதிரையில் குண்டும் குழியுமான CMP லேன் சாலை.. மாவட்ட ஆட்சியரிடம் ஷம்சுல் இஸ்லாம் சங்கம் கோரிக்கை

Editorial
0
அதிரையில் ஒவ்வொரு பகுதியிலும் சாலையை கொண்டு வருவதற்கு மக்கள் படாதபாடு பட்டு வருகிறார்கள். புகார் மனுக்கள், போராட்டங்கள் என பல கட்டங்களை கடந்தே சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அப்படி அமைக்கப்படும் சாலைகள் தரமாக இருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்ற பதிலே பெருவாரியாக வரும்.

ஆனால், லாப நோக்கத்தில் செயல்படும் ஒப்பந்ததாரர்கள் அந்த உத்தரவை கடைபிடிப்பது இல்லை. உள்ளாட்சி நிர்வாகங்களும் இதை பெரும்பாலும் கண்டுகொள்ளாமலேயே கடந்து செல்கின்றன. இந்த நிலையில் அதிரையின் சிஎம்பி லேன் பிரதான சாலை பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக காட்சி தருவதால் அந்த பாதையை பயன்படுத்த முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு உள்ளார்கள்.

பல ஆண்டுகளாக குறித்து கோரிக்கை வைத்தும் எந்த பயனும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று பல்வேறு பணிகளுக்காக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அதிராம்பட்டினம் வருகை தந்தார்.

அவரை சந்திந்த ஷம்சுல் இஸ்லாம் சங்க தலைவர் சாலிஹ், SIS இளைஞர் அமைப்பின் தலைவர் வழக்கறிஞர் முஹம்மது தம்பி, செயற்குழு உறுப்பினர் நவாஸ் உள்ளிட்டோர் முஹல்லாவிற்குட்பட்ட பகுதிகளின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். 

அதில் குறிப்பாக அதிரை  சிஎம்பி லைன் உள்ளிட்ட பகுதிகளில் வடிகால்,  சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும், 7வது வார்டில் சங்கத்திற்கு செல்லும் சாலை தரமற்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளது குறித்தும் புகார் செய்யபபட்டது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...