அதிரை சங்கங்கள், நிறுவனங்கள் மீது குவியும் குற்றச்சாட்டுக்கள்.. புகார் குழுக்கள் அமைக்கப்படுமா?

Editorial
0
அதிரையில் முஹல்லா ஜமாத் சங்கங்கள், சமூக நல அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகள் என பல நிறுவனங்கள் மக்கள் நலனுக்காக ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இதனால் நமதூர் மக்கள் பெரும் பயனடைந்து வருகின்றனர்.

இப்படி நல்ல நோக்கங்களுக்காக தொடங்கப்பட்ட சங்கங்கள் உள்ளிட்ட இதர நிறுவனங்களில் சிலர் அதிகாரத்தை கைப்பற்றியோ அல்லது பொறுப்பில் இருப்பவர்களை தங்களுக்கு சாதகமாக மாற்றி நியாயமற்ற முறையில் நடந்துகொள்வதாக குற்றச்சாட்டுகள் வருகின்றன.

சில நிறுவனங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சில அமைப்புகளின் நிர்வாகிகளில் தங்களை நாடி வரும் பொதுமக்களை மரியாதைக் குறைவாக நடத்துவதும், கிடைத்த பதவியை வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்வதாகவும், சொல்வதை கேட்க மறுப்பவர்களை சிலர் தாக்கும் அளவுக்கு செல்வதாகவும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

இப்படி பொறுப்புக்கு வந்த பிறகு அதை தவறாக பயன்படுத்துபவர்களை அதிலிருந்து நீக்கவும், அதில் உள்ள நிர்வாகிகள் மீதான செயல்பாடுகளை சங்கம் அல்லது சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் தெரியப்படுத்தவும் புகாரளிப்பதற்கான வாய்ப்புகளும் இல்லாமல் உள்ளது.

இந்த குறையை நிவர்த்தி செய்திடும் வகையில் புகார் குழுவை அந்தந்த சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் அமைத்து தர வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது. அதிரை பிறை மீதான புகார்களை தெரிவிக்க 10 ஆண்டுகளாக நாமும் நமது தளத்தில் புகாரளிக்கும் வசதியை அமைத்து இருக்கிறோம்.

நீங்கள் அதில் சென்று புகாரை தெரிவிக்கலாம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...