அதிரையில் தொடரும் முட்டாள்தனம்.. குப்பைகளோடு எரிக்கப்படும் குப்பைத் தொட்டிகள்

Editorial
0
அதிராம்பட்டினத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக வீடுகளில் குப்பைகளை பெற்றுச் செல்ல துப்புரவு தொழிலாளர்கள் முறையாக வராமல் இருந்து வந்தனர். இதன் பொதுமக்கள் சாலையோரங்களிலும் நீர் நிலைகளிலும் குப்பைகளை கொட்டி வந்தனர்.

இந்தநாள் காலப்போக்கில் அப்பகுதியே குப்பை மேடாகவும் உருமாறியது. இப்படி தெருவுக்கு 4 குப்பை மேடுகள் இருந்தன. 
குறிப்பாக ஆங்காங்கே கொட்டப்படும் குப்பைகள், மக்களின் அலட்சியத்தாலோ, விலங்குகள், பறவைகள், காற்றின் காரணமாகவோ சிதறிக்கிடந்தன. 


இதனால் சுற்றுச்சூழல் சீர்கேடுகள் தலை தூக்கின. கொசுத்தொல்லை காரணமாக அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு டெங்கு போன்ற கொடிய நோய் தொற்றுகள் ஏற்பட்டன. இதனை தவிர்க்க ஊர் முழுவதும் பல்வேறு ஜமாத்துகள், இயக்கங்கள் சார்பாக இரும்பு குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டன.
குறிப்பாக ஷம்சுல் இஸ்லாம் சங்க எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சங்கம் மற்றும் சுற்றுசூழல் மன்றம் சார்பாக குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டன. இவற்றில் நிரம்பி இருக்கும் குப்பைகளை அள்ளாமல் எரித்துவிட்டு செல்வது கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் காட்டுக்குளம் அருகே ஷம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டியையும் எரித்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து ஷம்சுல் சங்க நிர்வாகிகள் நகராட்சி நிர்வாகித்திடம் புகாரளித்து எரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...