அதிரையில் 24 மணி நேரம் அரசு மருத்துவமனை.. எம்எல்ஏவிடம் SDPI கட்சியினர் மனு

Editorial
0
பட்டுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் அண்ணாதுரை மற்றும் திமுக மாவட்ட பொருளாளரும் அதிரை முன்னாள் சேர்மனுமான எஸ்.ஹெச்.அஸ்லம் ஆகியோரை எஸ்டிபிஐ தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து அதிரைக்கு தேவையான கோரிக்கை மனுவை வழங்கினர்.

Advertisement:

SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் என்.முகமது புகாரி அவர்களின் தலைமையில் அதிரை எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் சந்தித்து திமுக மாவட்ட செயலாளராக தேர்வானதற்காக அண்ணாதுரைக்கு திமுக மாவட்ட பொருளாளராக தேர்வு செய்யப்பட்டதற்காக எஸ்.ஹெச்.அஸ்லம் ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து பொன்னாடை அணிவித்தனர்.
அவர்கள் அளித்த கோரிக்கை மனுவில், "அதிராம்பட்டினம் அரசு மருத்தவமனையில் 24/7 மணி நேரம் சிகிச்சை பெறும் வசதி இல்லாத காரணத்தால்  மக்கள் பெரிதும் சிரமப்படுவதால் அந்த வசதியை  ஏற்படுத்தி தர வேண்டும்.
அதிராம்பட்டினத்தை சுற்றி 40க்கும் மேற்பட்ட கிராமங்கள்  உள்ளன. தற்போது வரை அதிராம்பட்டினத்தில் தீயணைப்பு நிலையம்  இல்லை. ஆகையால் தீயணைப்பு நிலையம்  அமைத்து தர வேண்டும்.
 
மாளியக்காடு முதல் அதிராம்பட்டினம் வரை செல்லும் சாலையில் சரியான முறையில்  மின்விளக்குகள்  எரியாத காரணத்தினால் மக்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். எனவே  மின்விளக்குகளை புதுப்பித்து தர வேண்டும்.
  
அதிராம்பட்டினம் நகராட்சிக்கு புதிதாக ஒரு குப்பை கிடங்கு அமைத்து தர வேண்டும். 
அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தியும், ஆசிரியர் பற்றக்குறையை நிவர்த்தி செய்தும் தர வேண்டும். 

மதுக்கூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பேருந்து  நிலையத்தில் நிழற்குடை அமைத்துத் தர வேண்டும்.

மதுக்கூரில் பல காலங்களாக பராமரிப்பு இல்லாமல் இருந்து வந்த புது குளத்தை தூர்வாரி தண்ணீர் நிரப்பி தர வேண்டும்." எனவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...