அதிரையில் கொரோனா பரவல் தடுப்பு தொடர்பாக சார் ஆட்சியருடன் PFI சந்திப்பு


தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒருபகுதியாக இன்று முதல் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் சார்பில் பட்டுக்கோட்டை சார் ஆட்சியரை
 மண்டல செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் அதிரை Z.முஹம்மது தம்பி, உடன் நகர செயற்குழு உறுப்பினர் ராஜிக் சந்தித்து கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக விவாதித்தனர்.

இச்சந்திப்பில் கொரோனா பரவலை தடுப்பதற்கான உத்திகள், தன்னார்கள் தேவை, பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படாமல் தற்காத்துக் கொள்வது, மக்களுக்கு கொரோனா மீதான விழிப்புணர்வை ஏற்படுத்துவது, கட்டுபடுத்தப்பட்ட பகுதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. 


Post a Comment

0 Comments