அதிரையில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம்: ஆர்வத்துடன் போட்டுக்கொண்ட மக்கள்
நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை அதிவேகமாக பரவி வருவதால் மக்களை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் தமிழக மக்களை நோய்த் தொற்றில் இருந்து மீட்டெடுக்க அரசு சார்பாக மாநிலம் முழுவதும் ஆங்காங்கே முகாம்கள் அமைத்து அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரப்படுகிறது.

முன்னதாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா  தடுப்பூசி போடப்பட்ட நிலையில் தற்போது 18 வயதிற்கு மேற்பட்டு 45 வயதுக்குட்பட்ட வர்களுக்கான இலவச தடுப்பூசி சுகாதாரத் துறை சார்பாக போடப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் தினசரி இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் இன்று கொரோனா தடுப்பூசிக்கான சிறப்பு முகாம் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை  நடைபெற்றது. இதில், தன்னார்வலர்கள், பொதுமக்கள் என 139 பேர் ஆர்வமுடன் வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர். 


Post a Comment

0 Comments