அதிரை மக்களே... உங்கள் மின் பயன்பாட்டு அளவை மின்சார வாரியத்துக்கு அனுப்புவது எப்படி?

Editorial
0

தமிழகத்தில் 2 மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் வசதி தற்போது உள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வீடுவீடாக சென்று மின் கணக்கீடு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.இதையடுத்து முந்தைய மாத மின் கணக்கீட்டுக்கான கட்டணத்தையே செலுத்த வேண்டும் என்று மின்வாரியம் தெரிவித்த நிலையில், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பொதுமக்கள் தாங்களே சுய கணக்கீடு செய்து, அதன்படி கட்டணம் செலுத்தும் வசதியை இந்த மே மாதத்துக்கு மட்டும் மின்வாரியம் அறிமுகப்படுத்தி உள்ளது. 

அதன்படி, 10.05.2021 முதல் 24.05.2021 வரை மின் கணக்கீடு உள்ள அதிரை நுகர்வோர் தாங்கள் வீட்டின் EB மீட்டரில் KWH அளவை  புகைப்படம் எடுத்து கீழ்காணும் எண்களுக்கு உங்கள் EB எண்ணுடன் அனுப்பி வைக்கவும்.

+91 90254 37705, 9445853854
எடுத்துக்காட்டு படம்


அதன் அடிப்படையில் உங்கள் வீட்டிற்கான மின் பயன்பாடு கட்டண நிர்ணயிக்கப்படும். மக்கள் நேரில் மின்வாரியத்துக்கு வரவேண்டாம் என அதிரை உதவிமின் பொறியாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...