ஞாயிற்றுக்கிழமை வீடுகளில் தொழுதுகொள்ள ஜமாத்துல் உலமா அறிவுறுத்தல்

Editorial
0கொரோனா பரவலை முன்னிட்டு தமிழக அரசு இன்று முதல் இரவு நேர ஊரடங்கையும் ஞாயிற்றுக்கிழமைகளில் அறிவித்துள்ளது. ஆகவே தொழுகையாளிகள் இரவு 10 மணிக்குள் வீடு திரும்ப வசதியாக தராவீஹ் தொழுகையை 9:40 மணிக்குள் நிறைவு செய்யவும்.

ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து தொழுகைகளையும் வீடுகளிலேயே நிறைவேற்றிக்கொள்ளவும். 

அத்துடன் அனைத்து தொழுகைகள் மற்றும் நோன்பு திறப்பு, கஞ்சி விநியோகம் செய்கிற சந்தர்ப்பங்களிலும் அரசு அறிவுறுத்தியுள்ள முன்னெச்சரிக்கை நடைமுறைகளை உறுதியாக கடைபிடிக்குமாறு தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை கேட்டுக்கொள்கிறது.

அல்லாஹ் புனித ரமலானின் சகல பாக்கியங்களையும் நிறைவாக பெற்றுக்கொள்ள வாய்ப்பளிப்பானாக! இந்தக் கொடிய நோய்த்தொற்றிலிருந்து நம்மையும் உலக மனித சமுதாயத்தையும் பாதுகாத்தருள்வானாக வஸ்ஸலாம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...