அதிரையில் புதிய ஜும்மா பள்ளிவாசல் (மஸ்ஜித் இப்ராஹிம்) திறப்பு விழா அழைப்பு

Editorial
0

 

அதிராம்பட்டினம் லாவண்யா மஹால் பின்புறம் உள்ள கிராணி மைதானம் அருகே மஸ்ஜித் இப்ராஹிம் என்ற பெயரில் புதிய பள்ளிவாசல் கட்டுமானப் பணி நடைபெற்று வந்தது. 


இந்த பணிகள் நிறைவடைந்ததை அடுத்து வரும் ஏப்ரல் 2-ம் தேதி (19 ஷஃபான் ஹிஜ்ரி 1442) வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு பள்ளிவாசல் வக்ப் செய்து திறப்புவிழா நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து ஜும்மா தொழுகை நடத்தப்பட்டு தப்ரூக் வழங்கப்படும்.


இதுகுறித்து பள்ளிவாசல் மஸ்ஜித் இப்ராஹிம் நிர்வாகி, சர்புத்தீன் நம்மிடம் தெரிவிக்கையில், "ஃபாத்திமா நகரில் மக்கள் அருகாமையில் ஜும்மா பள்ளிவாசல் இல்லாததால் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே இந்த பள்ளிவாசல் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதுதொடர்பாக முறையான அனுமதியை பெற்று ஜும்மா பள்ளியாக மஸ்ஜித் இப்ராஹிமை திறக்க இருக்கிறோம். அதிராம்பட்டினம் சுற்றுவட்டார பகுதி மக்கள் அனைவரும் திறப்பு விழாவுக்கு வருகை தர வேண்டும்." என கேட்டுக்கொண்டார்.


Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...