நாம் தமிழருக்கு ஆதரவா? அதிரை ஷாஹின் பாக் சிஏஏ எதிர்ப்பு போராட்டக்குழு மறுப்பு

Editorial
1

தமிழகம் முழுவதும் குடியுரிமை திருத்தச்சட்டத்தை எதிர்த்து நடத்தப்பட்ட ஷாஹின் பாக் தொடர் போராட்டங்கள் வரலாற்று சிறப்புமிக்கதாக அமைந்தன. பாசிசத்துக்கு எதிரான  இஸ்லாமியர்களின் ஒற்றுமையை பரைசாற்றும் அந்த போராட்டங்கள் அமைந்தன.இந்த நிலையில், தமிழ்நாடு ஷாஹின் பாக் கூட்டமைப்பு என்ற பெயரில் ஒரு சிலர் நேற்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர். அதில், வரும் சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர். 

ஆனால், நேற்று செய்தியாளர் சந்திப்பை நடத்தியவர்களுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்திய ஷாஹின் பாக் குழுவினர் தெரிவித்து வருகின்றனர்.

அதிரை ஷாஹின் பாக் குழுவினரின் நிலைப்பாடு குறித்து அறிய அதன் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் முஹம்மது தம்பி அவர்களிடம் அதிரை பிறை சார்பில் தொடர்புகொண்டு பேசினோம். அப்போது விளக்கமளித்த அவர், "ஷாஹின் பாக் போராட்டம் என்பது மக்களின் வாழ்வுரிமைக்கானது. இதில் பல்வேறு தரப்பினரும் தங்கள் விருப்பு வெறுப்புகளை மறந்து பங்கேற்றனர். எனவே நாங்கள் தேர்தல் நிலைபாடுகளை எடுக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. எனவே நாங்கள் தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து முடிவெடுக்கவில்லை." என்றார்.

Post a Comment

1Comments
  1. On mobile gadgets, you can to|you probably can} play all of Red Dog Casino's games. Their games are compatible with the vast majority of} iOS and Android variations, 퍼스트카지노 without needing to download any particular apps. Bonuses are the name of the game at the most effective mobile casinos and Red Dog conscious of} it. If you occur to use Neosurf or Bitcoin on your first deposit, you’ll receive a further 20% on prime of the already generous 235% welcome bonus.

    ReplyDelete
Post a Comment
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...