சவூதியில் பணிபுரிவோருக்கு மகிழ்ச்சியான செய்தி... இனி நீங்களே பணி மாறலாம்

Editorial
0


சவூதி அரேபியாவில் புதிய தொழிலாளர் சீர்திருத்தச் சட்டம் LRI இன்று முதல் அமலாகிறது.

இந்த சட்டத்தின் மூலம் பணியில் இருக்கும் நிறுவனத்தில் குறைந்தபட்சம் ஒருவருடம் பூர்த்தி செய்த தொழிலாளர்கள் தங்களின் நோட்டிஸ் காலம் முடிந்த பின்னர் எளிமையான முறையில் தங்களின் முன்னால் நிறுவனங்களின் ஒப்புதல் இல்லாமல் பணியிடமாற்றம் செய்யலாம்.

எளிமையான முறையில் நிறுவனத்தின் ஒப்புதல் இல்லாமல் நாட்டை விட்டு வெளியே செல்ல மற்றும் திரும்பி வர தேவையான  எக்சிட் ரீஎன்ட்ரி விசாவை தாமாகவே பெற்றுக்கொள்ளும் வசதியை இச்சட்டம் வழங்குகிறது.

அதுபோல், முறையான வேலை ஒப்பந்தம் வழங்கப்படாத தொழிலாளர்கள் உடனடியாக வேறு நிறுவனங்களுக்கு முந்தைய நிறுவனத்தின் அனுமதி இல்லாமல் நிறுவனத்தின் செலவிலேயே தாமாக பணிமாற்றம் செய்து கொள்ளலாம்.

இதுபோன்ற மேலும் பல புதிய வசதிகளுடன் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு இடையிலான ஒப்பந்த உறவை மேம்படுத்த முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த புதிய முயற்சியால் 70 லட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டு தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி: அரப் நியூஸ்

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...