திமுக வேட்பாளருக்கு அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் 10 கோரிக்கைகள்

Editorial
0


1.  எமது சமுதாய இளைஞர்கள் விளையாட்டிற்கும் உடல் ஆரோக்கிய பயிற்சிக்கும் பொதுவான விளையாட்டு மைதானம் இல்லாமல் நீண்ட தூரம் பயணித்து தனியார் காலி மனைகளில் விளையாடக் கூடிய நிலைமை உள்ளதால் எங்களது நீண்ட நாள் கோரிக்கையான 'பொது விளையாட்டு மைதானம்'

 சம்சுல் இஸ்லாம் சங்கம்  மஹல்லாவுக்குட்பட்ட பகுதியில் அமைத்து தரவேண்டுமென கோருகிறோம்.


2. CMP (cauvery metur project) லேன் வழித்தடத்தில் நீண்ட கால பிரச்சனையான, வடிகால்வாய் வசதி கழிவுநீர் வாய்க்கால் அமைத்து தர வேண்டுகிறோம்.


இது சம்பந்தமான மனு அதிரை பேரூராட்சியிலும், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரூர் மன்றங்களின் உதவி இயக்குனர் (AD) அவர்களிடமும் கொடுக்கப்பட்டு உள்ளதையும் இதன் வாயிலாக தங்களின் கவனத்திற்கும் கொண்டு வருகிறோம்.


 3. எமது சம்சுல் இஸ்லாம் சங்கம் மஹல்லாவுக்குட்பட்ட பகுதியில் பொதுமக்கள், மற்றும் சிறார்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில்  பொழுதுபோக்கு பூங்கா ஒன்றினை அமைத்து தர வேண்டுகிறோம்.


4. நடுத்தெரு செட்டியா குளம் சீரமைப்பு மற்றும் அதனையொட்டியிருக்கும் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கூடம் சுற்றுச் சுவர் உயர்த்தி, சுகாதாரமான கல்விக் கூடமாக அதன் பாதுகாப்பை உறுதிசெய்து , பள்ளி குழந்தைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் ஏற்படுத்தி வேண்டுகிறோம்.


5. ஆஸ்பத்திரி தெரு சாதுலியா பள்ளி அருலில் இருக்கும் 'பள்ளிக் குளம்' சுத்திகரிக்கப்பட்டு முறையான கழிவுநீர் வாய்க்கால் அமைத்து அந்த குளத்தைச் சுற்றி பெண்களுக்கான நடைமேடையுடன் mini garden சிறிய பூங்க அமைத்து தர வேண்டிக் கொள்கிறோம்.


6. CMP (cauvery metur project) வாய்க்கால் நெடுகிலும் சீரமைப்பு செய்து, அதிராம்பட்டினத்தில் உள்ள அனைத்து குளங்களுக்கும் water pumping system, மூலம் தண்ணீர் நிரப்பி தரவும் ஆவனம் செய்ய வேண்டுகிறோம்.


7. அதிராம்பட்டினத்தில் பெரும்பாலான பகுதிகளில் தார் சாலைகள் போடப் பட்டு உள்ளது ஆனால், சம்சுல் இஸ்லாம்  சங்கத்திற்கு உட்பட்ட பகுதியாக உள்ள வார்டு எண்கள் 19 மற்றும் 21 முற்றிலுமாக புறக்கணிக்கப் பட்டு வந்துள்ளதை பலமுறை பேரூராட்சி மன்றத்தில் முறையிட்டும் முறையான நடவடிக்கைகள் இல்லை ஆதாலால் இந்த இரு வார்டுகள சுற்றிய பகுதிகளில் முழுமையான சாலை வசதிகளை உடணடியாக ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


8. இஸ்லாமியர்களுக்கென பொது அடக்கஸ்தளம் (கப்ருஸ்தான்) குறிப்பாக, மக்தூம் பள்ளி, உமர் பள்ளி, வண்டிப் பேட்டைப் பள்ளி, ஃபாத்திமா நகர் பள்ளி அனைத்துக்குமானதாக அரசே அமைத்து கொடுக்க ஆவண செய்ய வேண்டுகிறோம்.


9. மிக முக்கியமாக எமது சங்க முஹல்லாவிற்குட்பட்ட பகுதியில் 'பொது நூலகம்' ஒன்றினை அமைத்து அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் வாசிப்புக்கான வசதிகளுடன் கூடிய வளாகம் அமைத்து தருமாறு ம் வேண்டிக் கொள்கிறோம்.


10. அவசரகால தேவைகளுக்கான 108 அவசர ஊருதியும், அரசு மருத்துமனையினை 24/மணிநேர சேவையை ஊர்ஜிதப்படுத்தி அதன் இயக்கத்தை செம்மை படுத்தி தரவும் வேண்டுகிறோம்.


இங்கனம்,

சம்சுல் இஸ்லாம் சங்கம்

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...