துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற அதிரை வீரர்..!

Editorial
0


 நாமக்கல் துப்பாக்கிச்சுடுதல் அகாடமி நடத்திய மாவட்ட துப்பாக்கிச்சுடுதல் போட்டி சேலம் ஆக்ரா வியூகம் ரைஃபிள் கிளப்பில் பிப்ரவரி 5, 6, 7, 8 ஆகிய நாட்களில் நடைபெற்றது. 

போட்டியை சேலம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை ஆணையர் பூபதிராஜன் மற்றும் சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் நாகராஜன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.   

இப்போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுமார் 350 துப்பாக்கி சுடும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.   

இதில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை  சேர்ந்த துப்பாக்கி சுடும் வீரர்கள் வஜீர் அலி மற்றும் தைஷீர் அலி ஆகியோர் பங்கேற்றனர்.   

இப்போட்டியில் வஜீர் அலி 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெங்கல பதக்கம், நினைவு பரிசு மற்றும் சான்றிதழ் வென்றார்.   

தைஷீர் அலி 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் நினைவு பரிசு மற்றும் சான்றிதழ் பெற்றார்.   

 போட்டியில் வெற்றிபெற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு சேலம் மாவட்ட துணை ஆணையர் செந்தில் பதக்கங்களை வழங்கினார்.  

இதை தொடர்ந்து அடுத்த மாதம் சென்னையில் நடக்க உள்ள மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.



Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...